டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு எவ்ளோ பரிசுத்தொகை தெரியுமா ? – ஐ.சி.சி அறிவிப்பு

WTC
- Advertisement -

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்து வந்த சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடத்தியது. இந்த தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்க்கான ஈர்ப்பினை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கவும் டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்புடன் வைக்கவும் ஐசிசி இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்தது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத்தொடரானது சிறப்பாக நடைபெற்றது.

INDvsNZ

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த தொடரின் இறுதிப் போட்டியில் வருகிற 18-ஆம் தேதி மோத இருக்கிறது. ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

- Advertisement -

மேலும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியாக அந்த அணிதான் கருதப்படும் எனவே இந்த கௌரவத்தை அடைய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் இந்திய அணி 17 போட்டிகளில் விளையாடி 12 போட்டிகளில் வெற்றி பெற்றது.

ind

அதேபோல நியூசிலாந்து அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது நடைபெற உள்ள கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு தொகையை தற்போது ஐசிஐசிஐ அறிவித்துள்ளது. அதன்படி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 11 கோடியே 71 லட்சத்து 66 ஆயிரத்து 960 ரூபாய் வழங்கப்படும்.

இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 5 கோடியே 85 லட்சத்து 83 ஆயிரத்து 480 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐசிசி சிஇஓ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement