ஐபிஎல்’லை ஓவர்டேக் செய்த ஐசிசி.. 2024 டி20 உலகக் கோப்பை பரிசுத்தொகை அறிவிப்பு.. ஆறுதல் பரிசு வேற லெவல்

T20wc and IPL
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை ஜூன் இரண்டாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. வரலாற்றில் முதல் முறையாக இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக 20 அணிகள் விளையாடி வருகின்றன. மேலும் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஐசிசி உலகக் கோப்பையின் கணிசமான போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் கிரிக்கெட் அணிகள் விளையாடுகின்றன. எனவே இம்முறை கோப்பையை வென்று சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக மகுடம் சூடப்போகுது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான பரிசுத்தொகை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

- Advertisement -

பரிசுத்தொகை அறிவிப்பு:
மொத்தமாக இந்த தொடருக்கு இந்திய ரூபாயில் 93 கோடி பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் முதலாவதாக சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் 2.45 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்திய ரூபாயில் இது சுமார் 20.36 கோடிகளாகும்.

கடைசியாக நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை 2.45 மில்லியன் டாலர்கள் பரிசாக வழங்கப்படுவதால் 2024 டி20 உலகக் கோப்பை தொடர் ஐபிஎல் தொடரை முந்தி அதிக பரிசுத் தொகை வழங்கப்படும் டி20 தொடராகவும் சாதனைப் படைக்க உள்ளது. கடைசியாக நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற கொல்கத்தாவுக்கு 20 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து இறுதிப் போட்டியில் தோல்வியை சந்திக்கும் அணிக்கு 1.28 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாயில் 10.64 கோடி பரிசாக ஐசிசி அறிவித்துள்ளது. அதே போல செமி ஃபைனலில் தோல்வியை சந்திக்கும் 2 அணிகளுக்கு 787,500 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாயில் 6.54 கோடி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூப்பர் 8 சுற்றில் தோல்வியை சந்தித்து வெளியேறும் அணிகளுக்கு தலா 3.17 கோடி ஆறுதல் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரெடி.. ஒதுக்கப்பட்ட பாண்டியா – துண்டு போட்ட இளம்வீரர்

அத்துடன் லீக் சுற்றில் தோல்வியை சந்தித்து 9 – 12வது இடங்களை பிடிக்கும் 4 அணிகளுக்கு தலா 2 கோடி ஆறுதல் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக லீக் சுற்றில் தோல்வியை சந்தித்து 13 – 20 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 1.87 கோடி ரூபாய் ஆறுதல் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக இந்த தொடரில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வெற்றிக்கும் அந்தந்த அணிகளுக்கு தலா 31,154 டாலர்கள் உத்வேக பரிசாக ஐசிசி அறிவித்துள்ளது.

Advertisement