ஐ.சி.சி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் – சறுக்கலை சந்தித்த இந்திய அணி

IND-vs-ENG

ஐசிசி தற்பொழுது தர வரிசை புள்ளி பட்டியலில் அப்டேட் செய்துள்ளது. அதன்படி ஒருநாள் அணிக்கான தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சமீபத்தில் நடந்த பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியை ஒயிட் வாஷ் செய்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணி சறுக்கலை சந்தித்துள்ளது.

nz

கடந்த ஒரு ஆண்டாக முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தொடரை 2-1 என்ற கணக்கில் தோற்றது. இதன் காரணமாக நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது. அதேசமயம் மூன்றாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி பின்தங்கி மூன்றாவது இடத்திற்கு தற்பொழுது சென்றுள்ளது.

ஒருநாள் அணிக்கான புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்தில் இருப்பது போல் ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் ட்ரென்ட் போல்ட் தற்பொழுது உள்ளார். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் இடத்திற்கு சென்றுள்ளார்.

நியூசிலாந்து ஆண்களைப் போல் நியூசிலாந்து அணியை சேர்ந்த சோபி டிவைன் பெண்களுக்கான டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். இப்படி நியூசிலாந்து அணியும் அதனுடைய வீரர் வீராங்கனைகளும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது அந் நாட்டு ரசிகர்களை சந்தோஷம் அடைய வைத்துள்ளது.

- Advertisement -

boult1

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி எப்பொழுதும் போல முதலிடத்தில் உள்ளது. அதேபோல பெண்களுக்கான டி20 பேட்ஸ்வுமன் தரவரிசை பட்டியலில் ஷெஃபாலி வர்மா முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.