கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு. தோனிக்கு கிடைத்த மரியாதை – விவரம் இதோ

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் சார்பாக கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர்களை வைத்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை தனித்தனியாக அறிவித்துள்ளது. இந்த மூன்று வகையான அணியிலும் இந்திய வீரர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக தோனி, கோலி, அஸ்வின் மற்றும் ரோஹித் ஆகியோர் இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்றே கூறலாம். இந்திய அணியின் தற்போதைய கேப்டன் கோலி மூன்றுவிதமான ஐசிசி அணிகளிலும் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

Dhoni

- Advertisement -

அதேபோன்று தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம்பெற்றுள்ளார். இந்த சகாப்தத்தின் அதாவது கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்களை கொண்டு அமைக்கப்பட்ட ஒரு நாள் அணி வீரர்களுக்கான பட்டியலில் இந்திய வீரரான ரோகித் சர்மா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் ஆகியோர் துவக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக கோலி, ஏபி டிவில்லியர்ஸ், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விக்கெட் கீப்பராக இந்திய அணியின் முன்னணி வீரர் எம்எஸ் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வாகியுள்ளார். மேலும் பந்துவீச்சாளர்களாக மிட்செல் ஸ்டார்க், டிரென்ட் போல்ட், இம்ரான் தாஹிர், லசித் மலிங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.#

ஐ.சி.சி. தேர்வு செய்த சிறந்த ஒருநாள் அணி இதோ :

- Advertisement -

1) ரோஹித் 2)வார்னர் 3) கோலி 4) ஏ.பி.டி 5) சாகிப் அல் ஹசன் 6) தோனி 7) ஸ்டோக்ஸ் 8)ஸ்டார்க் 9) போல்ட் 10) தாஹீர் 11) மலிங்கா

அதேபோன்று ஐசிசி வெளியிட்டுள்ள டி20 அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் க்றிஸ் கெயில் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதன்பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக பின்ச், கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள். அதேபோன்று விக்கெட் கீப்பராக டோனி தேர்வாகியுள்ளார். பின்வரிசையில் பொல்லார்ட், ரஷித் கான், பும்ரா, மலிங்கா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

- Advertisement -

ஐ.சி.சி. தேர்வு செய்த சிறந்த டி20 அணி இதோ :

1) ரோஹித் 2) கெயில் 3) பின்ச் 4) கோலி 5) ஏ.பி.டி 6) மேக்ஸ்வெல் 7)தோனி 8)பொல்லார்ட் 9)ரஷீத் கான் 10) பும்ரா 11) மலிங்கா

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் யாதெனில் ஐசிசி அறிவித்துள்ள இந்த கடந்த 10 ஆண்டுகளுக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியையே இரு அணிகளுக்கும் கேப்டனாக நியமித்துள்ளது. இந்த 10 ஆண்டுகளில் ஏகப்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து இந்திய அணி சிறப்பாக வழிநடத்தியதற்காக தோனிக்கு இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement