இந்தியா பாகிஸ்தான் போட்டியில் ஏற்பட்ட சம்பவம் போன்று இந்த இறுதிப்போட்டியில் எதுவும் நடக்கக்கூடாது – ஐ.சி.சி. அதிரடி

World
- Advertisement -

உலக கோப்பை தொடர் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்று முடிந்து இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

eng vs nz

- Advertisement -

தற்போது நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி இன்று நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெல்லும் அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ள லார்ட்ஸ் மைதானத்தின் மேல் விமானங்களிலும் பறக்கக் கூடாது என்று ஐசிசி அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடிய லீக் போட்டியில் பலுசிஸ்தான் மற்றும் காஷ்மீர் தொடர்பான அரசியல் செய்திகளுடன் பேனர்களை ஏந்திய விமானங்கள் மைதானத்தில் மீது பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

flight

தனைத் தொடர்ந்து தற்போது இறுதிப்போட்டியில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க மைதானத்தை சுற்றி உள்ள பகுதிகளில் விமானத்தை பறக்க தடை செய்யபட்டுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தை சுற்றிய பகுதிகளில் no fly zone என்று ஐசிசி நிர்வாக குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement