தப்பு செய்த அம்பயர் தர்மசேனாவுக்கு பிரமோஷன். தப்பே செய்யாத இந்திய நடுவர் டிஸ்மிஸ் – சர்ச்சை முடிவு எடுத்த ஐ.சி.சி

Dharmasena
- Advertisement -

நடந்து முடிந்த உலகக் கோப்பை அடுத்து இனி வரும் 2019 மற்றும் 20 ஆம் ஆண்டுக்கான கள நடுவர்கள் பற்றிய அறிவிப்பினை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மட்டுமின்றி அந்த தொடர் முழுவதும் மிக மோசமாகஅம்பயரிங் செய்த இலங்கை அணியின் குமார தர்மசேனா அம்பயராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Dharmasena

- Advertisement -

ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் இந்த பட்டியலில இந்திய நாட்டை சேர்ந்த நடுவரான ரவி ஐ.சி.சி நடுவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன் காரணத்தை ஐசிசி குறிப்பிடவில்லை. குமார தர்மசேனா வின் முடிவுகள் பல நேரத்தில் தவறாக இருந்துள்ளது. மேலும் பல நோபால்களை அவர் கவனிக்காமல் இருந்துள்ளார்.

உலககோப்பை இறுதிப் போட்டியிலும் அவர் தவறாக கொடுத்த 6 ரன்களே இங்கிலாந்து அணி போட்டியை சமன் செய்த பெரும் உதவி புரிந்தது மேலும் பல தவறுகளை இவர் அந்த தொடரில் செய்துள்ளார். ஆனால் இவரை நடுவர் குழுவில் வைத்து இந்திய அம்பயர் ரவியை நீக்கியது இந்திய ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Umpire

இதனை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஐசிசியின் இந்த முடிவினை எதிர்த்து தொடர்ந்து தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐ.சி.சி இந்த முடிவு தற்போது கிரிக்கெட் விமர்சகர்கள் இடையேயும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement