டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு. இதுலயும் நம்ம ஆள்தான் நம்பர் 1 ஆ – புள்ளி விவரம் இதோ

pant 2
- Advertisement -

உலக கோப்பை தொடர் முடிந்து ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. அதற்கடுத்து தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

Kohli

- Advertisement -

அதன்படி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி(922) புள்ளிகளுடன் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார். ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலிலும் கோலி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரண்டாம் இடத்தில் வில்லியம்சன்(913), மூன்றாம் இடத்தில் புஜாரா (881)உள்ளனர். டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இந்திய அணியின் வீரர்களான ஜடேஜா(6 ஆம் இடம்) மற்றும் அஸ்வின்(10இடம்) இருக்கின்றனர்.

Jadeja 1

டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்களில் ஜடேஜா மூன்றாம் இடத்திலும், பென் ஸ்டோக்ஸ் நான்காம் இடத்திலும், ஜேசன் ஹோல்டர் முதல் இடத்திலும் உள்ளனர். தரவரிசை பட்டியல் வெளியானதையடுத்து ஆஷஸ் தொடர் மற்றும் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் போன்றவை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement