தமிழக வீரர் நடராஜன் உட்பட 4 இந்திய வீரர்களின் பெயர் பரிசீலனை – ஐ.சி.சி வழங்க இருக்கும் புதிய விருது

nattu 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி ஆண்டுதோறும் அந்த நடப்பு ஆண்டில் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு அளித்து கௌரவித்து விருதினை வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான வீரர், வீராங்கனை தேர்வு செய்து அவர்களுக்கு வாக்களித்து விருதினை பெறச் செய்கின்றனர். அந்தவகையில் மேலும் தற்போது ஒரு அங்கமாக இனி மாதம் தோறும் சிறப்பாக செயல்படும் வீரர் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

icc

- Advertisement -

முன்னாள் வீரர்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவுடன் இனி ரசிகர்களும் இணைந்து செயல்பட்டு இந்த விருதுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வார்கள். இதில் வீரர்கள் களத்தில் செயல்படுவது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருது பரிந்துரை குழுவால் தீர்மானிப்படுவார்கள்.

விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்கள் மற்றும் வெற்றிகள் பெற்ற வீரர்களின் பெயர்கள் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது திங்கட்கிழமை அறிவிக்கப்படுவார்கள் என்று ஐசிசி அறிவித்துள்ளது. முழுக்க முழுக்க ரசிகர்களின் ஆன்லைன் ஓட்டிங் மூலம் இந்த விருது வழங்கப்பட உள்ள நிலையில் தற்போது இந்த மாதத்திற்கான விருது பட்டியலில் இந்திய வீரர்களான 4 பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Nattu

அதன்படி ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், தமிழக வீரர் நடராஜன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஏனெனில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இவர்களின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுதவிர இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், ஆப்கானிஸ்தானின் அறிமுக வீரர் குர்பாஸ் ஆகியோரின் பெயரும் பரிசீலனையில் உள்ளன என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement