ஐ.சி.சி வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியல். விராட் கோலியை மிஞ்சிய அவரது சிஷ்யன் – விவரம் இதோ

Rahul-1
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தாலும் டி20 தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றது. இந்திய அணியின் தொடக்க வீரரான கே எல் ராகுல் ஒருநாள் தொடரில் ஓரளவு சிறப்பாக விளையாடி இருந்தாலும் டி20 தொடரில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவரது ஆட்டம் கடந்த பல தொடர்களாகவே டி20 வடிவத்தில் சிறப்பாக இருந்து வருகிறது.

Rahul 2

- Advertisement -

இவர் ஆஸ்திரேலியா எதிரான 3 டி20 தொடரில் 51, 30, 0 என மொத்தம் 81 ரன்களை குவித்துள்ளார். கேஎல் ராகுல் தலைசிறந்த டி20 வீரராக திகழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமையில் டி20 போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தொடக்க வீரர் கேஎல் ராகுல் இடம் பெற்றிருக்கின்றனர்.

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் இருவர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. டி20 தரவரிசையில் இந்திய தொடக்க வீரர் கேஎல் ராகுல் 816 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் 915 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

Rahul 1

பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் 820 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் இருக்கிறார். இதில் இந்திய கேப்டன் விராட் கோலி 697 புள்ளிகள் பெற்று ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தில் உள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச், தென் ஆப்பிரிக்க வீரர் ராஸி வான் டெர் டுசென், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், இந்திய வீரர் விராட் கோலி, நியூஸிலாந்து வீரர் கொலின் முன்ரோ மற்றும் டிம் சீஃபர்ட், ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரதுல்லா ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

Rahul

பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில் ரஷீத் கான் மற்றும் இரண்டாம் இடத்தில் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement