4 ஆவது போட்டியில் செய்த தவறை மீண்டும் கடைசி போட்டியிலும் பண்ணிருக்காங்க – ஐ.சி.சி அபராதம்

- Advertisement -

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்து இந்திய அணி மிக நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுற்றது. இந்த தொடரில் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று வெளிநாட்டு மண்ணில் டி20 தொடரை ஒயிட் வாஷ் செய்து வெற்றி பெற்ற முதல் சர்வதேச அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

- Advertisement -

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இவ்வாறு பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்க ஒருபுறம் அணிக்கு சிறு சிறு சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆம் 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சற்று தாமதமாகவே பந்து வீசியதாக ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது.

5வது போட்டியில் வழக்கமான கேப்டனாக விராட் கோலி களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேட்னாக செயல்பட்டார். அவரும் பேட்டிங் செய்யும்போது காயமாகி பாதியில் வெளியேறினார். இதனால் இளம் வீரரான கே.எல் ராகுலுக்கு கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இப்படியிருக்க இந்திய அணி பந்து வீசும்போது வழக்கமான நேரத்தை விட சற்று அதிகமாகவே நேரம எடுத்துக் கொண்டார்கள் என ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது .

rohith 6

குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்கள் வீசி இருக்க வேண்டும், ஆனால் 19 ஓவர்கள் மட்டுமே இந்திய வீரர்கள் வீசி இருந்தனர். இதற்கு அபராதமாக போட்டியின் தொகையில் ஒவ்வொரு வீரருக்கும் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 4 வது போட்டியிலும் இந்திய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement