ஆப்கானிஸ்தான் அணியில் நடந்த அதிசய நிகழ்வு.. தனது மாமாவுக்கு முக்கிய கௌரவத்தை கொடுத்த மாப்பிள்ளை

AFG Ibrahim zadran
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. பிப்ரவரி இரண்டாம் தேதி கொழும்புவில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 91 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4, அஷிதா பெர்னாண்டோ 3, பிரபத் ஜெயசூர்யா 3 விக்கெட்களை வீழ்த்தினார்கள். அதை தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய இலங்கை சொந்த மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது நாள் முடிவில் 410 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தானை விட 212 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

மாமாவுக்கு கெளரவம்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக அனுபவ வீரர் அஞ்சலோ மேத்யூஸ் சதமடித்து 141, தினேஷ் சந்திமால் 107 ரன்கள் எடுத்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் சார்பில் இதுவரை அதிகபட்சம் நவீட் ஜாட்ரான் 2, காய்ஸ் அஹ்மத் 2 விக்கெட்களை எடுத்துள்ளனர். முன்னதாக இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக 35 வயதாகும் நூர் அலி ஜாட்ரான் அறிமுக வீரராக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2010 முதல் 51 ஒருநாள், 20 டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்கு விளையாடியுள்ளார். அதில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெறாமல் இருந்து வந்த அவர் தொடர்ந்து மனம் தளராமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார்.

- Advertisement -

அந்த வரிசையில் 35 வயதாகும் அவர் கடந்த வருடம் இதே இலங்கையில் நடைபெற்ற வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்காக விளையாடியது வேடிக்கையாக அமைந்தது. இருப்பினும் தொடர்ந்து போராடிய அவருக்கு ஒரு வழியாக இப்போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஆச்சரியம் என்னவெனில் அதற்காக வழங்கப்பட்ட கௌரவ அறிமுக தொப்பியை தன்னுடைய மாப்பிள்ளை இப்ராஹிம் ஜாட்ரான் கைகளில் நூர் அலி ஜாட்ரான் பெற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க: மொத்த ஜாம்பவான்களையும் முந்திய பும்ரா.. நூற்றாண்டின் ஆசிய நாயகனாக 146 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை

குறிப்பாக வெறும் 22 வயதாகும் இப்ராஹிம் 35 வயதாகும் தன்னுடைய மாமாவுக்கு கௌரவ அறிமுக தொப்பியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதை பார்க்கும் ரசிகர்கள் இது போல 35 வயதும் மாமாவுக்கு 22 வயதாகும் மாப்பிள்ளைக்கு அறிமுக டெஸ்ட் தொப்பியை வழங்கிய அரிதான நிகழ்வை நாங்கள் பார்த்ததில்லை என்று சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். அது போக இப்ராஹிம் ஜாட்ரான் – நூர் அலி ஜாட்ரான் ஆகிய மாப்பிள்ளையும் மாமனும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்காக துவக்க வீரர்களாக களமிறங்கியது ரசிகர்களுக்கு இன்னுமொரு ஆச்சரியமாகும்.

Advertisement