ஹீரோ தோனியை முந்த முடியுமா.. கில்கிறிஸ்ட் மாதிரியான ரிஷப் பண்ட்க்கு அந்த வேலை இருக்கு.. இயன் ஸ்மித்

Ian Smith
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் 2வது இன்னிங்ஸில் 109 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 634 நாட்கள் கழித்து சிறப்பான கம்பேக் கொடுத்த அவர் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியின் வாழ்நாள் சாதனையும் சமன் செய்தார்.

அதன் காரணமாக தோனியை விட ரிஷப் பண்ட் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவில் ரிஷப் பண்ட் போன்ற மற்ற அனைத்து விக்கெட் கீப்பர்களுக்கு தோனி தான் ஹீரோ என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். எனவே தோனியின் இடத்தை நிரப்பும் மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு உள்ளதாக இயன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தோனியின் இடத்தில் ரிஷப் பண்ட்:

மேலும் ரிஷப் பண்ட் சிறந்த கீப்பர் கிடையாது என்றாலும் ஆடம் கில்கிறிஸ்ட் போல அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் என்று அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி டால்க்ஸ்போர்ட்ஸ் இணையத்தில் இயன் ஸ்மித் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட்டை ஒரு கிரிக்கெட்டராக நான் விரும்புகிறேன். மிகவும் முக்கிய வேலையை செய்யும் அவர் மிகப்பெரிய இடத்தை நிரப்ப வேண்டிய இடத்தில் உள்ளார்”

“ஏனெனில் தோனிக்கு பின் அவர்கள் வளரத் துவங்கினர். நீங்கள் ஹீரோ காரணி பற்றி பேசுகிறீர்கள். அது போன்ற சூழ்நிலையில் எம்எஸ் தோனியை கடந்து செல்வது மிகவும் கடினம். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்து சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படத் துவங்கினால் உங்கள் வாழ்க்கை வியக்கத் தகுந்த முறையில் மாறுகிறது”

- Advertisement -

ஆடம் கில்கிறிஸ்ட் போல:

“எனவே நன்றாக செயல்படும் போது நீங்கள் நிகரான எதையும் தாண்டி ஒரு சூப்பர் ஸ்டாராகி விடுகிறீர்கள். ரிஷப் பண்ட் அந்த அணுகுமுறையை கொண்டுள்ளார். அவர் சண்டையிலிருந்து எப்போதும் ஓடுவதில்லை. பேட்டிங்கில் ஓப்பனிங் அல்லது 5வது இடம் உட்பட எங்கே விளையாடச் சொன்னாலும் அவர் களமிறங்குவார். உண்மையில் அவர் இந்த உலகம் கண்ட சிறந்த கீப்பர் கிடையாது”

இதையும் படிங்க: கடவுள் பும்ராவை வித்யாசமாக படைச்சுருக்காரு.. அவரை பாத்து இதை செய்றது ரொம்ப கஷ்டம்.. ஆகாஷ் தீப்

“ஆனால் அதில் வேலை செய்யும் அவர் முன்னேறுவார். ஏனெனில் ஸ்டம்புகளுக்கு பின்னால் நீங்கள் அதிகமாக நேரத்தை செலவிடும் போது உங்கள் உழைப்பு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இந்த அறிகுறியையே அவர் எனக்குக் கொடுத்துள்ளார். அந்த விஷயத்தில் அவர் கில்கிறிஸ்ட் போன்றவர். அவரை நான் உயரமாக மதிப்பிடுகிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்குகிறது.

Advertisement