கடவுள் பும்ராவை வித்யாசமாக படைச்சுருக்காரு.. அவரை பாத்து இதை செய்றது ரொம்ப கஷ்டம்.. ஆகாஷ் தீப்

Akash Deep 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். மற்ற பவுலர்களைப் போல் அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான பவுலிங் ஆக்சனைக் கொண்டிருப்பது அவருடைய ஸ்பெஷலாகும். ஆனால் அந்த ஆக்சனையும் வைத்துக்கொண்டு ஆரம்பக் காலங்களில் பும்ரா கொஞ்சம் தடுமாற்றமாகவே செயல்பட்டார்.

இருப்பினும் அனுபவத்தால் முன்னேறிய அவர் சமீபத்திய வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகளை எடுத்த அவர் தொடர்நாயகன் விருதை வென்றார். அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல அவர் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

கடவுளின் படைப்பு பும்ரா:

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா கடவுளின் வித்தியாசமான படைப்பு என்று அவருடன் வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர் ஆகாஷ் தீப் கூறியுள்ளார். தம்மை போன்ற மற்ற பவுலர்களுக்கு பும்ரா ஆலோசனைகளை கொடுப்பதாகவும் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜஸ்ப்ரித் பும்ரா போல பந்து வீசுவது மற்றவர்களுக்கு மிகவும் கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“நான் தொடர்ச்சியாக அவரிடம் பேசி அவருடைய பந்து வீச்சை உள்வாங்கி வருகிறேன். அவர் முற்றிலும் வித்தியாசமானவர். கடவுள் அவரை வித்தியாசமாக படைத்துள்ளார். அவரிடமிருந்து நான் நிறைய ஆலோசனைகளை பெற்று கற்றுக் கொண்டு வருகிறேன். அவரிடம் குறிப்பிட்ட பேட்ஸ்மேனுக்கு எதிராக எப்படி பந்து வீச வேண்டும் என்ற மனநிலை பற்றி கேட்டறிந்தேன்”

- Advertisement -

பும்ரா போல கஷ்டம்:

“அவர் என்னுடைய கேள்விகளுக்கு மதிப்புள்ள ஆலோசனைகளை கொடுத்தார். அந்தளவுக்கு பும்ரா அறிவுள்ள நபர். அது அவருடைய பந்து வீச்சில் வெளிப்படுகிறது. குறிப்பாக பந்து வீசுவதற்கு முன்பாக பேட்ஸ்மேனை பற்றி படிக்கும் அவருடைய திறன் அற்புதமானது. அவர் இந்தியாவுக்காக பரிசளிக்கப்பட்ட பவுலர். அவருடைய காலடிகளை நாம் பின்பற்றுவது எளிதல்ல” என்று கூறினார்.

இதையும் படிங்க: சென்னை ரசிகர்கள் மீது விராட் கோலி வருத்தப்பட்டாரு.. சேப்பாக்கம் மைதானத்தின் அவலத்தை பகிர்ந்த அஸ்வின்

அந்த வகையில் டி20 உலகக் கோப்பைக்கு பின் ஓய்வெடுத்த பும்ரா அடுத்ததாக வங்கதேச டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளார். அத்தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் எடுத்த அவர் இந்தியாவில் வெற்றி பங்காற்றினார். இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 3வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூர் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement