IND vs AUS : எப்டியும் சாதகமான வழில தான் ஜெயிக்க போறீங்க, இந்தியாவை நியாயமின்றி விமர்சித்த இயன் ஹீலி – ரசிகர்கள் பதிலடி

ian healy virat kohli
Advertisement

2023 சர்வதேச கிரிக்கெட்டில் நடைபெறும் 2 ஆடவர் உலகக் கோப்பைகளில் முதலாவதாக ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. அதற்காக கடந்த 2021 முதல் நடைபெற்று வரும் லீக் சுற்றில் இதுவரை நிறைவு பெற்ற போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன. அதில் ஆஸ்திரேலியாவின் ஃபைனல் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனால் பைனல் செல்வதற்கு வரும் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

AUs vs IND

குறிப்பாக குறைந்தது 3 போட்டிகளை வென்றாக வேண்டிய நிலைமையில் உள்ள இந்தியா 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் எந்த ஒரு டெஸ்ட் தொடரிலும் தோற்றதில்லை. எனவே இம்முறையும் இந்தியா நிச்சயமாக இத்தொடரை வென்று பைனலுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வரலாற்றிலே முதல் முறையாக தங்களை தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்து அவமான தோல்வியை பரிசளித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்த்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கும் தகுதி பெற ஆஸ்திரேலியா போராட உள்ளது.

- Advertisement -

குறுக்கு வழி:
மேலும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை இந்திய மண்ணில் சுழல் பந்து வீச்சு அதிகமாக எடுபடும் என்பதால் அதற்கேற்றார் போல் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்களை வைத்து விளையாடி வெற்றி காணும் வியூகங்களை இரு அணிகளும் இப்போதே வகுத்து வருகின்றன. இந்நிலையில் எப்போதுமே இந்தியாவில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தாறுமாறாக சுழலும் ஆடுகளங்கள் அமைக்கப்படும் என்பதால் இம்முறையும் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் இயன் ஹீலி நேரடியாக தாக்கியுள்ளார்.

Eden Gardens Kolkata

அதாவது எப்படியும் முதல் நாளிலேயே சுழல் பந்து வீச்சு எடுபடும் அளவுக்கு ஒருதலைபட்சமான பிட்ச் தான் இத்தொடரில் அமைக்கப்படும் என்பதால் சாதகமான ஆடுகளங்களை உருவாக்கி குறுக்கு வழியில் தான் இந்தியா வெல்லும் என்ற வகையில் மறைமுகமாக விமர்சித்துள்ள அவர் இது பற்றி சென் ரேடியோவில் பேசியது பின்வருமாறு. “இந்தியாவிடம் நல்ல அணி உள்ளது. ஆனால் அவர்கள் காரணமில்லாத பிட்ச்சுகளை அமைக்காத வரை அவருடைய ஸ்பின்னர்களை நினைத்து நான் பயப்படப்போவதில்லை. ஒருவேளை கடந்த பயணத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொடரில் காரணமற்ற பிட்ச்கள் அமைக்கப்பட்டிருந்தது போல் இம்முறையும் அமைக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக ஆஸ்திரேலியா வெல்ல முடியாது”

- Advertisement -

“ஏனெனில் கடந்த முறை இந்தியாவில் நடைபெற்ற தொடரில் 2 பிட்ச்கள் மோசமாகவும் நியாயமற்றும் இருந்தது. குறிப்பாக முதல் நாளிலேயே ஸ்பின்னர்கள் பேட்ஸ்மேன்களின் தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். எனவே அது போன்ற ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருந்தால் எங்களை விட இந்தியர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி காண்பார்கள். ஆனால் ஒருவேளை பிளாட்டான பிட்ச்கள் அமைக்கப்பட்டிருந்தால் எங்களால் வெல்ல முடியும் என்று நினைக்கிறேன். அந்த சமயங்களில் பவுலர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் எப்படியும் இத்தொடரில் மிட்சேல் ஸ்டார்க் முதல் போட்டியில் களமிறங்காமல் போனால் இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் வெல்வதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Shane Warne Ian Healy

மேலும் இந்த வருடம் இறுதியில் இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரில் நிச்சயம் தங்களது அணி வெல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் நாங்கள் தான் சுழலுக்கு சாதகமான ஆடுகளம் அமைத்து வெற்றி கொள்கிறோம் சரி ஆனால் நீங்கள் ஏன் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதுவும் வேகத்துக்கு கை கொடுக்கும் காபாவில் 5 மில்லி மீட்டர் புற்களை வளர்த்து 2 நாட்களுக்குள் 142 ஓவர்களில் வெற்றி கண்டீர்கள் என்று அவருக்கு பதிலடி கொடுக்கிறார்கள்.

இதையும் படிங்க: தொடர் நாயகன் விருதை அவருக்கு கொடுக்காம விராட் கோலிக்கு ஏன் கொடுத்தீங்க? மீண்டும் விமர்சித்த கம்பீர்

மேலும் ஆஸ்திரேலியா என்றால் வேகம், பவுன்ஸ் இருப்பது இயற்கை என்று சொல்லும் நீங்கள் இந்தியாவில் சுழல் இருப்பது மட்டும் செயற்கை என்று சொல்வது எந்த வகையிலும் நியாயமில்லை என்று இந்திய ரசிகர்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement