தொடர் நாயகன் விருதை அவருக்கு கொடுக்காம விராட் கோலிக்கு ஏன் கொடுத்தீங்க? மீண்டும் விமர்சித்த கம்பீர்

Gambhir
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் வெற்றியுடன் கைப்பற்றிய இந்தியா அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. முன்னதாக இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய இந்தியா திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சம்பிரதாய கடைசிப் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி மற்றும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்தது.

virat kohli 166

- Advertisement -

அந்த வெற்றிக்கு சுப்மன் கில் 116 ரன்கள் குவித்திருந்தாலும் கடைசி வரை அவுட்டாகாமல் 390/5 ரன்கள் குவிப்பதற்கு அதிரடியாக விளையாடி 166* ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். கடந்த 15 வருடங்களாக இதுபோல நிறை வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்ததால் சந்தித்த கடுமையான விமர்சனங்களை 2022 ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை அபாரமாக செயல்பட்டு வெற்றிக்கு போராடினார்.

நியாயமா நடந்துக்கோங்க:
அதே வேகத்துடன் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சதமடித்த அவர் இந்த இலங்கை தொடரில் முதல் போட்டியிலும் கடைசி போட்டியில் அடுத்தடுத்த சதங்களை அடித்து முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளார். மேலும் 2 சதங்கள் உட்பட 284 ரன்களை குவித்த அவர் இலங்கை ஒருநாள் தொடரின் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். அந்த வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை (20) சமன் செய்த அவர் 2023 உலகக் கோப்பைக்கு முன்பாக முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

IND vs SL Siraj Rohit

இந்நிலையில் இதே தொடரில் விராட் கோலியை விட பும்ரா இல்லாத குறையை போக்கும் அளவுக்கு 3 போட்டிகளில் 9 விக்கெட்களை 10.22 என்ற அபாரமான சராசரியில் எடுத்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட முகமது சிராஜ் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். குறிப்பாக பேட்டிங்க்கு சாதகமாக பிளாட்டாக இருந்த பிட்ச்களில் விராட் கோலி அசத்தியதில் ஆச்சரியமில்லை என்று தெரிவிக்கும் அவர் அதே சவாலான ஆடுகளங்களில் முகமது சிராஜ் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டதாக கூறியுள்ளார்

- Advertisement -

. எனவே குறைந்தபட்சம் தொடர் நாயகன் விருதை அந்த இருவருக்கும் பகிர்ந்து கொடுத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை அவர் விராட் கோலிக்கு நிகரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். எனவே தொடர் நாயகன் விருதை அவருக்கு பகிர்ந்து கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளங்களில் சிராஜ் அபாரமாக செயல்பட்டார். ஆனால் பொதுவாகவே நாம் பேட்ஸ்மேன்கள் பெரிய சதங்களை அடிக்கும் போது மற்றவர்களை மறந்து விடுகிறோம்”

Gautam-Gambhir-and-Virat-Kohli

“என்னை பொறுத்த வரை இந்த தொடர் முழுவதும் சிராஜ் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் பொதுவாகவே பவுலர்கள் ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இன்று அவர் அதை எடுக்கவில்லை என்றாலும் புதிய பந்தில் அபாரமாக பந்து வீசினார். ஒவ்வொரு போட்டியிலும் அவர் இந்தியாவில் வெற்றிக்கு அடித்தளம் இடுகிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்கஇந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நீக்கப்பட இதுதான் காரணம் – சுனில் கவாஸ்கர் விளக்கம்

அவர் கூறுவது போல திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி போட்டியிலும் இலங்கையை வெறும் 73 ரன்களுக்கு சுருட்டி சரித்திர வெற்றி பெறுவதற்கு 4 விக்கெட்களை எடுத்து முக்கிய பங்காற்றிய சிராஜ் தொடர் நாயகன் விருது பெறுவதற்கு தகுதியானவர் என்றே சொல்லலாம்.

Advertisement