- Advertisement -
உலக கிரிக்கெட்

பலி கிடாவான கோன்ஸ்டஸ்.. ஆம்ப்ரோஸ் இல்ல வெட்டிப்பேச்சு என கலாய்த்த ஹீலி முகத்தில் கரியை பூசிய ஜோசப்

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. பார்படாஸ் நகரில் ஜூன் 20ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியாவை 180 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் சுருட்டி வீசியது. அதிகபட்சமாக ஹெட் 59, கவாஜா 47 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக சமர் ஜோசப் 4, ஜெய்டேன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் போராடி 190 ரன்களை அடித்து 10 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக சாய் ஹோப் 48, கேப்டன் சேஸ் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகப்படுத்தமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடும் ஆஸ்திரேலியா 2வது நாள் முடிவில் 92/4 என தடுமாறி வருகிறது.

- Advertisement -

வம்பிழுத்த ஹீலி:

முன்னதாக கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. அத்தொடரில் காபாவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வெஸ்ட் இண்டீஸ் வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிக்கு 2வது இன்னிங்ஸில் கால் வலியைத் தாண்டி 4 விக்கெட்டுகள் எடுத்த சமர் ஜோசப் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அந்த சூழ்நிலையில் இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய வீரர் இயன் ஹீலி தேவையின்றி சமர் ஜோசப்பை வம்பிழுத்தார். அவர் பேசியது பின்வருமாறு. “காபாவில் எங்களை தோற்கடித்ததிலிருந்து சமர் ஜோசப்புக்கு கடந்த ஒரு வருடம் சுமாராகவே அமைந்தது. இன்று என்னிடம் வந்த சமர் “இந்தத் தொடரில் என்ன வரப்போகிறது (கோன்ஸ்டஸ்) என்பதை பாருங்கள்” என்று சொன்னார்”

- Advertisement -

பலி கிடாவான கோன்ஸ்டஸ்:

“அதற்கு “ஓகே சமர், ஏற்கனவே கடந்த ஒரு வருடமாக நீங்கள் எதுவுமே செய்யவில்லை” என்று அவருக்கு பதிலளித்தேன். என்னைக் கேட்டால் அவர் முன்னேற வேண்டும். இம்முறை அவர் உண்மையான சிக்கலில் சிக்குவார். ஏனெனில் நீங்கள் ஒன்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் கிடையாது சாம்ப் (சாம்பியன்)” என்று பேசினார். அதாவது இம்முறை சாம் கோன்ஸ்டஸ்க்கு சவாலைக் கொடுக்க உள்ளதைப் பற்றி சமர் தம்மிடம் சொன்னதாக ஹீலி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அதை கட் பண்ணாலே இந்தியா ஈஸியா ஜெய்க்கும்.. பும்ராவிடம் கேட்டு சப்போர்ட் பண்ணுங்க.. ஷமி அட்வைஸ்

அதற்கு உங்களால் வெட்டித்தனமாக பேச முடியுமே தவிர, ஆம்ப்ரோஸ் போல அசத்த முடியாது என்ற அவருக்கு பதிலடி கொடுத்ததாகவும் ஹீலி கூறினார். கடைசியில் ஆஸ்திரேலியாவின் 19வது ஓப்பனிங் பேட்ஸ்மேன் சாம் கோன்ஸ்டஸை 2 இன்னிங்ஸிலும் அவுட்டாக்கிய சமர் ஜோசப் சொன்னதை செய்து ஹீலியின் முகத்தில் கரியைப் பூசினார். ஹீலி ஸ்லெட்ஜிங் செய்ததற்காக சமர் ஜோசப்பிடம் தேவையின்றி சாம் கோன்ஸ்டஸ் பலி கிடாவானார் என்றால் மிகையாகாது.

- Advertisement -