இந்திய வீரர்களான இவர்கள் பேட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும் – அம்பயர் இயான் குட் பேட்டி

Ian-Gould
- Advertisement -

கிரிக்கெட்டில் மிகச்சிறந்த சிறந்த நடுவர்களில் ஒருவராக இருந்தவர் இயன் குட். இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேலாக நடுவர் பணியினை சிறப்பாக செய்து வந்தவர். இந்நிலையில் சமீபத்தில் தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் களத்தில் நடுவராக இருந்து கொண்டு எந்த பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை பார்ப்பதற்கு பிடிக்கும் என்பது பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

- Advertisement -

நான் பார்த்தவரையில் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மேலும் இந்தியாவின் விராத் கோலி ஆகிய மூன்று பேர்தான் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்தனர். ஜாக்காலிசின் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருக்கும். அவர் ஒரு மிகச் சிறந்த வீரர் ஆவார்.

டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவருமே அபாரமான ஆட்டக்காரர்கள். இந்த மூன்று பேரையும் பார்ப்பது எனக்கு பிடிக்கும். விராட் கோலி ஒரு வித்தியாசமான மனிதர். உணர்ச்சிகரமான ஒரு ஆக்ரோஷமான வீரர். டெண்டுல்கரை போன்று அவர் ஆடுகிறார். சச்சினை போன்ற அவருக்கும் ரசிகர்கள் அதிகம்.

Sachin

Kallis

அதேபோல் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மிகச்சிறந்த ஆட்டத்தை நான் பார்த்ததில்லை. ஆனால் அவர் அருமையான வீரர். மிகச் சிறந்த கேப்டன், ஆஸ்திரேலியாவிற்கு பல பெருமைகள் சேர்த்துள்ளார் இவ்வாறு கூறியுள்ளார் இயன் குட்.

இயன் குட் தனது நடுவர் கிரிக்கெட் வாழ்க்கையில் 74 டெஸ்ட் 170 ஒருநாள் போட்டிகள் மற்றும் 37 டி20 போட்டிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். ஐசிசி வருடாவருடம் அறிவிக்கும் எலைட் நடுவர்கள் பேனலில் பல வருடங்கள் இவர் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கிலாந்து அணிக்காக 18 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் இயன் குட்.

Advertisement