146 வருட வரலாறு கொண்ட கிரிக்கெட் போட்டிகள் சமீபகாலத்தில் விடுவிடுவென வளர்ந்துவிட்டது. குறிப்பாக கடந்த 13 வருடத்திற்கு முன்னர் டி20 போட்டிகள் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு வருடமும் மிகப்பெரிய மாற்றத்தை கண்டிருக்கிறது கிரிக்கெட் போட்டி. இந்த மாற்றங்கள் அனைத்தும் கிரிக்கெட் போட்டியை வளர்ப்பதற்கே உதவியிருக்கின்றன. கிரிக்கெட் போட்டிகளின் வளர்ச்சி அந்த விளையாட்டின் வர்த்தகத்தை மேலே கொண்டு சென்று விட்டது.
கால்பந்து கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு இணையாக இல்லை என்றாலும் கிட்டத்தட்ட அந்த விளையாட்டுகளின் பக்கத்தில் வந்துவிட்டது.
ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகளை வைத்து வீரர்கள் சிக்சர் பவுண்டரி அடிக்காமல் பந்தை தரையில் உருட்டி தான் ஆடுவர். ஆனால் டி20 போட்டியில் உருவானதிலிருந்து வித்தியாச வித்தியாசமான ஷாட்கள் உருவாக்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு வீரரும் தங்களுக்கு ஏற்றாற்போல் மரபியல் முறையை மாற்றி பந்தை அடித்தால் போதும் என்னும் அளவிற்கு ஒடிக்கொண்டிருக்கின்றனர்.
ஏபி டிவில்லியர்ஸ், கிளன் மேக்ஸ்வெல், கெவின் பீட்டர்சன் போன்ற வீரர்கள் எல்லாம் இதில் கில்லாடிகள். இந்நிலையில் இதுபோன்ற வித்தியாசமாக ஆடும் ஷாட்களை சர்வதேச போட்டிகளில் தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் இயான் சேப்பல். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் போட்டியில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் இடது கையில் திரும்பி சிக்சருக்கு பந்தை அடித்து விளாசினார்.
இதனை பார்த்த இயன் சாப்பல் இதுபோன்ற ஷாட் சர்வதேச போட்டிகளில் வைக்கக்கூடாது என்று தெரிவித்து போர்க்கொடி தூக்கியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் நன்றாக இருக்கிறது. குறிப்பாக வார்னர், ஸ்மித், ஆரோன் பின்ச் போன்றவர்கள் தங்களது திறமையை நிரூபித்து விட்டனர்.
ஆனால் modern-day கிரிக்கெட்டில் கொண்டு வரப்பட்டிருக்கும் “ஸ்விச் ஹிட்” அதிகமாக ஆளப்பட்டிருக்கிறது. குறிப்பாக க்ளென் மேக்ஸ்வெல் மிக அதிகமாக இந்த சாட்டை ஆடுகிறார். இது கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல இதுபோன்ற ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கு சிக்கலை கொடுக்கும். மேலும் இதுபோன்ற ஷாட்கள் பந்துவீச்சாளருக்கும், பீல்டருக்கும் எதிராக நடைபெறும் அநீதி போன்றது. எனவே இந்த மாதிரியான ஷாட்களை பேட்ஸ்மேன்கள் ஆட ஐசிசி தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் இயான் சேப்பல்.