பணத்திற்கு ஆசைப்பட்டு ஐ.பி.எல் தொடரில் விளையாட வேண்டாம். 3 முன்னணி ஆஸி வீரர்களை எச்சரித்த – இயான் சேப்பல்

Chappell
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது நடக்கவில்லை என்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மட்டுமின்றி உலக அளவில் உள்ள வீரர்களுக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இந்த தொடரை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று பிசிசிஐ குறியாக இருக்கிறது.

Ipl cup

- Advertisement -

இதற்கு பெரிய ரிஸ்க் எடுக்கவும் பிசிசிஐ தயங்காது என்று தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை டி20 தொடர் நடக்க உள்ளது. அந்த உலகக்கோப்பை தொடர் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டால் அந்த இடைவெளியில் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்ற அளவிற்கு பிசிசிஐ சென்றுகொண்டிருக்கிறது. மேலும் ,இதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் ஷேஃபீல்டு ஷில்டு மற்றும் ஒன் டே கப் ஆகிய உள்ளூர் தொடர்கள் நடைபெற உள்ளது.

இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அவ்வாறு நடக்கும்போது ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள கூடாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இயான் சேப்பல் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெற்றால் அது ஆஸ்திரேலியாவின் உள்ளூர் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் அரங்கேறும். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் சென்று விளையாடுவார்கள். இதனால் நமது கிரிக்கெட் கட்டமைப்பு பாதிக்கப்படும்.

warner

Smith-1

இப்படியிருக்கையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் ஐபிஎல் தொடரில் இருந்து விலக வேண்டும் என்று கூறியுள்ளார் சாப்பல். மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்னணி வீரர்களை பொருளாதார ரீதியில் நன்றாக கவனித்து வருகிறது .

- Advertisement -

இதன் காரணமாக அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட விட்டாலும் பெரிய பாதிப்பு அவர்களுக்கு இருக்காது. இதனை யோசித்து சரியாக அவர்கள் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் அவர். மேலும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்களுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் பணத்திற்காக ஆசைப்பட்டு ஐ.பி.எல் போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று சுற்றிவளைத்து கூறியுள்ளார்.

Cummins

ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் அடுத்த 6 மாதங்களுக்கு விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதால் அடுத்த பல மாதங்களுக்கு அவர்கள் எங்கு சென்றும் விளையாட வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட அக்டோபர் மாதம் வரை அவர்களால் சாதாரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement