ரோஹித் சர்மா எடுத்த அந்த முடிவு தான் இன்னைக்கு அவரோட கரியரையே காப்பாத்தியிருக்கு – இயான் சேப்பல் கருத்து

Ian-Chapell
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக கேப்டன் ரோகித் சர்மா திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே திணறிய வேளையில் ரோகித் சர்மா மட்டும் 120 ரன்களை குவித்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் அடிக்க மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.

Rohit Sharma

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 177 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 91 ரன்களையும் மட்டுமே அடித்தது. இதன் காரணமாக இந்திய அணி எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது. ரோகித் சர்மா இந்த போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 15 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என அற்புதமான சதத்தை விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான இயான் சேப்பல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் இந்த சதம் குறித்த பாராட்டுகளை தெரிவித்ததோடு கிரிக்கெட்டில் அவர் எடுத்த ஒரு முக்கியமான முடிவுக்கு குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Rohit-Sharma

இந்த மைதானத்தில் ரோஹித் சர்மா விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது. அவரிடம் இருக்கும் நம்பிக்கை அவர் பேட்டிங் செய்யும்போதே வெளிப்பட்டது. அதன் காரணமாகத்தான் அவரால் இந்த அற்புதமான சதத்தையும் அடிக்க முடிந்தது. தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் எப்படி ஆட வேண்டும் எந்த மாதிரியான ஷாட்களை விளையாட வேண்டும் என்றும் அவர் தனது பேட்டிங்கின் மூலம் மற்றவர்களுக்கு செய்து காட்டியுள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மா தன்னை துவக்க வீரராக மாற்றியது தான் அவரது டெஸ்ட் கரியரை காப்பாற்றியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக ரோஹித் விளையாட வேண்டும் என்று முன்னாள் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி எடுத்த முடிவு தான் இன்று அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட காரணமே ஏனெனில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விளையாடி இருந்தால் இவ்வளவு தூரம் விளையாடி இருக்க மாட்டார்.

இதையும் படிங்க : காதலர் தினமான இன்று 2 ஆம் திருமணம் செய்ய இருக்கும் ஹார்டிக் பாண்டியா – கல்யாணம் எங்க தெரியுமா?

அப்படி ரோஹித் சர்மா துவக்க வீரராக மாற்றியதில் இருந்து அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கிறது என இயான் சேப்பல் கூறினார். இதுவரை இந்திய அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 9 சதம் மற்றும் 14 அரை சதங்களுடன் 3257 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement