என்ன அஷ்வின் பத்தி இப்படி சொல்லிட்டீங்க. மஞ்சரேக்கரை லெஃப்ட் ரைட் வாங்கிய – இயான் சேப்பல்

Ian
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சமீபகாலமாகவே இந்திய வீரர்களை குறை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதுமட்டுமின்றி ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவாக பேசியும் இவர் சில மாதங்கள் வர்ணனையில் இருந்து நீக்கப்பட்டது நாம் அறிந்ததே. அந்த வகையில் ஏற்கனவே கடந்த உலகக் கோப்பையின் போது ரவீந்திர ஜடேஜாவை வம்பிழுத்து பேசிய மஞ்ச்ரேக்கர் தற்போது தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை விமர்சித்து வம்பிழுக்கும் வகையில் பேசியுள்ளார்.

Manjrekar

- Advertisement -

இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓரங்கட்டப்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் முதன்மை வீரராக இன்று வரை விளையாடி வருகிறார். இதுவரை 78 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 409 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி 30 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், ஏழுமுறை ஒரு போட்டியில் பத்து விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தொடரிலும் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது அஸ்வினை தான் தலைசிறந்த பந்து வீச்சாளர் என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று மஞ்சரேக்கர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒருமுறைகூட அஷ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தியதில்லை மேலும் அஸ்வினுக்கு சமமாக ஜடேஜா பந்து வீசி வருகிறார். அதுமட்டுமின்றி அக்சர் பட்டேல் இங்கிலாந்து தொடரில் அஸ்வினை விட அதிக விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் என்று அவர் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

Manjrekar

இந்நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குறித்து பலரும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து பேசி இருந்தனர். இந்நிலையில் தற்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான இயான் சேப்பல் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில் : அஸ்வின் மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளர் ஆவார். அவர் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான லயனைவிட சிறந்த வீரர்.

Ashwin

இவரை எப்படி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சிறந்த வீரர் இல்லை என்று கூறலாம். வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஜோல் கார்னர் அச்சுறுத்தலான பந்துவீச்சாளர் ஆனால் அவர் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய கிடையாது. அதனால் அவரை சிறந்த பவுலர் இல்லை என்று கூறிவிட முடியுமா ? அதே போல் தான் என்னை பொறுத்தவரை அஸ்வின் சிறப்பான பந்து வீச்சாளர் என்று அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு இயான் சேப்பல் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement