IND vs AUS : முதல் நாளே முடிச்சுருக்கணும் பவுலிங்ல இந்தியா அந்த தப்பு பண்ணிட்டீங்க, இனி வெற்றி கஷ்டம் தான் – இயன் சேப்பல்

Ian Chappell Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. இருப்பினும் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் சிறப்பான வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து ஒயிட் வாஷ் தோல்வியையும் தவிர்த்தது. அதனால் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ள நிலையில் 2வது அணியாக தகுதி பெறுவதற்கு மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.

Khawaja 1

- Advertisement -

அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபிளாட்டாக இருக்கும் பிட்ச்சில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 378/5 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. டிராவிஸ் ஹெட் 32, மார்னஸ் லபுஸ்ஷேன் 3, ஸ்டீவ் ஸ்மித் 38, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சதமடித்து 162* ரன்களும் கேமரூன் க்ரீன் 114 ரன்களும் குவித்தனர். முன்னதாக இத்தொடரில் முதல் 3 போட்டிகளில் அனைத்து பிட்ச்களும் சுழலுக்கு சாதகமாக இருந்த நிலையில் இந்த போட்டியின் பிட்ச் பிளாட்டாக இருக்கிறது.

தப்பு பண்ணிட்டீங்க:
அதனால் பவுலர்கள் அதிரடியாக விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் தடுமாறுவதால் முதல் முறையாக இத்தொடரில் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தும் இப்போட்டி 5 நாட்கள் முழுமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டியின் முதல் நாளில் சிறப்பாக பேட்டிங் செய்து சதமடித்த இடது கை பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜாவுக்கு எதிராக இந்திய பவுலர்கள் அரௌண்ட் தி விக்கெட் திசையில் தொடர்ந்து பந்து வீசி தவறு செய்து விட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

IND

மாறாக இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஓவர் தி விக்கெட் திசையில் பந்து வீசியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் அதை சரியாக செய்ய தவறிய இந்தியா முதல் நாளில் பின்னடைவை சந்தித்ததால் இப்போட்டியில் வெல்வது கடினம் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இடது கை பேட்ஸ்மன்களுக்கு எதிராக ஏன் எல்லா நேரங்களிலும் இந்தியா அரௌண்ட் தி விக்கெட் திசையில் பந்து வீசுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதில் எந்த சிறப்பான திட்டமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை”

- Advertisement -

“பொதுவாக இடது கை பேட்ஸ்மேன்களிடம் பேசும் போது ஓவர் தி விக்கெட் திசையிலிருந்து வீசும் வலது கை பவுலர்களை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று என்னிடம் தெரிவிப்பார்கள். அது சரி என்றாலும் இந்தியா அரௌண்ட் தி விக்கெட் திசையில் மீண்டும் முயற்சிக்கிறார்கள். ஒருவேளை இந்த திட்டம் இங்கிலாந்து மண்ணில் அங்குள்ள கால சூழ்நிலைகளில் வேலை செய்யலாம். ஆனால் இந்தியாவில் உஸ்மான் கவஜா போன்ற ஆன் சைட் திசையில் வலுவான வீரருக்கு எதிராக பின்பற்றுவது மோசமானதாகும்”

Ian Chappell

“அவர் கால்களில் அடிக்க முயற்சிக்கும் போது நீங்கள் ஏன் தொடர்ந்து அங்கேயே வீசுகிறீர்கள்? அதன் காரணமாக கவாஜா மிகவும் எளிதாக பேட்டிங் செய்தார். அவரது பேட்டிங்கை முறியடிப்பதற்கு தேவையான திட்டங்களுடன் இந்தியா வரவில்லை. அது இந்த போட்டியில் அவர்களுக்கு வலியை ஏற்படுத்த துவங்கி விட்டது” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : வாழ்வின் மிகப்பெரிய சோகத்தை சந்தித்த பட் கமின்ஸ் – முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் ஆறுதல்

அவர் கூறுவது போல தவறான அணுகு முறையுடன் பந்து வீசி வரும் இந்திய பவுலங்கை சிறப்பாக எதிர்கொள்ளும் உஸ்மான் கவாஜா சதமடித்தும் ஓயாமல் சிறப்பாக பேட்டிங் செய்து வருவது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அவரது சிறப்பான ஆட்டத்தால் 300 ரன்களை ஆஸ்திரேலியா தொட்டுள்ளது இப்போட்டியில் இந்தியாவின் வெற்றியை கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement