இவர் மட்டும் இந்திய அணியில் இருந்தா ஆஸ்திரேலியாவை ஈஸியா தோக்கடிச்சிடலாம் – இயான் சேப்பல் கருத்து

Chappell
- Advertisement -

கொரோனோ வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. மேலும் இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை தொடர் என அனைத்தும் நடைபெறுவது சந்தேகமே என்று தோன்றுகிறது.

IndvsAus-1

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த டெஸ்ட் தொடரை நடத்துவதில் ஆஸ்திரேலிய நிர்வாகமும் அதில் கலந்துகொள்ள இந்திய நிர்வாகம் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த தொடருக்கு முன்னதாக இரு அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு பின்னர் இந்த தொடரில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான அட்டவணை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் நடை பெறாமல் போனால் ஆஸ்திரேலிய நிர்வாகத்திற்கு 1400 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதன்காரணமாக இந்த தொடரை நடத்தியாக வேண்டும் என்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கட்டாயத்தில் உள்ளது.

indvsaus

மேலும் கடந்த 2018-19 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை முதல் முறையாக கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியதால் இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற உத்வேகம் காட்டும் என்று தெரிகிறது. இந்நிலையில் தற்போது இந்த இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இயான் சேப்பல் தனது கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறுகையில் கூறியதாவது : இந்திய அணி கடந்த முறை ஆஸ்திரேலிய அணியை எளிதாக வென்றது ஆனால் இம்முறை அவ்வாறு இருக்காது. இருப்பினும் ஹார்டிக் பாண்டியா இந்திய அணியில் இடம் பெற்றால் அது இந்திய அணிக்கு பெரிய உதவியாக இருக்கும் அவர் நெருக்கடியான நேரத்தில் கூடுதல் பந்துவீச்சாளராகவும் தேவையான நேரத்தில் அதிரடி ஆட்டம் ஆட கூடிய வீரர் ஆவா.ர் மேலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவைப்படும் நேரத்தில் பாண்டியாவின் பங்கு மிக முக்கியமானது.

Pandya

இந்திய அணிக்கு இக்கட்டான நிலையில் ஏழாம் இடத்தில் கூட அவர் பேட்டிங் கை கொடுக்கும் திறமை படைத்தவர் என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான அட்டவணையில் டிசம்பர் 3ஆம் தேதி முதல் போட்டியும், டிசம்பர் 11ம் தேதி இரண்டாவது போட்டியும், டிசம்பர் 26 ஆம் தேதி 3-வது போட்டியும், ஜனவரி 3 ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement