அவர் ஒரு எக்சலன்ட்டான பேட்ஸ்மேன். ஆனா நல்ல கேப்டன் கிடையாது – இயான் சேப்பல் ஓபன்டாக்

Chappell
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியானது இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது போட்டியிலும் தற்போது ஆஸ்திரேலியா வெற்றிக்கு மிக அருகில் உள்ளது.

aus vs eng

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: ஜோ ரூட் ஒரு பேட்ஸ்மேனாக எக்சலன்ட்டான வீரர். ஆனால் கேப்டனாக அவர் ஒரு சிறந்த வீரர் கிடையாது. ஏனெனில் அவருக்கு கிடைத்திருக்கும் இங்கிலாந்து அணியானது சிறப்பான அணி. அதில் அவர் லக்கியாக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

உண்மையாக ஒருவீரர் நீண்ட நாள் கேப்டனாக இருக்க வேண்டுமெனில் அணி எந்த நிலையில் இருந்தாலும் சரி செய்யும் குணாதிசயம் இருக்க வேண்டும். அந்த வகையில் ஜோ ரூட் ஒரு “Poor Captain” என்றே சொல்லலாம். இருப்பினும் அவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று இயான் சேப்பல் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் குறித்து கூறுகையில் : கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது அவர் ஏன் நியமிக்கப்பட்டார் என்பது குறித்து அதிக அளவில் பேச்சு இருந்தது.

Root

ஆனால் கேப்டனாக தனது முதல் போட்டியிலேயே அவர் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். அதுமட்டுமின்றி கேப்டனாக அவர் இனி வரும் போட்டிகளில் நிறைய விடங்களை கற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படுவார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனெனில் இதுவரை அவர் விளையாடியுள்ள போட்டிகளில் எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ அப்போதெல்லாம் விக்கெட் எடுத்துக் கொடுத்தது மட்டுமின்றி அணிக்கு உறுதுணையாகவும் திகழ்ந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இனிமே ரஹானே விளையாட வாய்ப்பில்லை. பி.சி.சி.ஐ போட்டுள்ள ஸ்கெட்ச் – முன்னாள் வீரர் கருத்து

இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் அவர் தவறு செய்தாலும், அதில் இருந்து திருத்திக்கொண்டு நிச்சயம் வருங்காலத்தில் ஆஸ்திரேலிய அணியின் பெரிய கேப்டனாக மாறுவார் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பெண் ஊழியர் ஒருவர் அளித்த பாலியல் புகார் காரணமாக தனது கேப்டன்சியை ராஜினாமா செய்த டிம் பெயினுக்கு பதிலாக தற்போது புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement