தற்போதைய நவீன கிரிக்கெட்டில் 5 சிறந்த டெஸ்ட் பவுலர்கள் இவர்கள்தான் – இயான் சேப்பல் தேர்வு

Chappell
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி நெருங்கி வரும் இவ்வேளையில் டெஸ்ட் போட்டிகள் குறித்தும், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் குறித்தும் ஏகப்பட்ட தகவல்களை முன்னாள் வீரர்கள், பிரபலங்கள், கிரிக்கெட் நிபுணர்கள் என பலரும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் தற்போதைய நவீன கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஐந்து சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அவர் குறிப்பிட்ட இந்த ஐந்து சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கம்மின்ஸ் இருக்கிறார்.

- Advertisement -

கம்மின்ஸ் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கம்மின்ஸ் அவருடைய முதல் தேர்வாகும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ashwin

அஷ்வின் : அஸ்வின் நாதன் லயனை விட சிறந்த பந்து வீச்சாளர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் முதல் ஐந்து இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பார். அதேபோன்று லயனை விட அவரது பந்துவீச்சில் சாராம்சம் அதிகம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். என்னை பொறுத்தவரை அஸ்வின் தான் நேதன் லையனை விட சிறப்பான பந்து வீச்சாளர் ஏனெனில் லயன் உடைய ஸ்ட்ரைக் ரேட்டை பார்த்தால் அஸ்வினுடையது மிகவும் குறைவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Ishanth

இஷாந்த் சர்மா : கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு பணிகளை இஷாந்த் சர்மா தொடர்ச்சியாக செய்து வருகிறார். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கூட 11 போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து அவருடைய பந்து வீச்சும், பந்துவீச்சு ரெக்கார்டும் சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Shami

முகமது ஷமி : இவரும் இந்திய அணியில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது பந்துவீச்சு அற்புதமாக உள்ளது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Rabada

ரபாடா : இந்த பட்டியலில் நான் ஐந்தாவதாக தேர்ந்தெடுக்கும் வீரர் ரபாடா தான் அவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற ஒரு சிறப்பான பவுலர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் தற்போது முன்னணி நட்சத்திர வீரரான இவர் திகழ்ந்து வருவதாக இயான் சேப்பல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement