- Advertisement -
இந்திய கிரிக்கெட்

1972 டென்னில் லில்லி மாதிரி இந்தியா.. பும்ராவை யூஸ் பண்ணா ஆஸியில் ஜெய்க்கலாம்.. இயன் சேப்பல் கருத்து

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தங்களது சொந்த மண்ணில் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடரில் எப்படியாவது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியா இப்போதே தயாராகி வருகிறது. ஏனெனில் கடைசியாக சொந்த மண்ணில் நடைபெற்ற 2 டெஸ்ட் தொடர்களில் இந்தியாவிடம் 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்றது.

ஆனால் இம்முறை இந்தியாவை 4 – 1 (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார். இருப்பினும் தரமான இந்திய அணி ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி சிறப்பாக விளையாடினால் இம்முறையும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஜாம்பவான் கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியிருந்தார்.

- Advertisement -

பும்ரா முக்கியம்:

இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற ஜஸ்ப்ரித் பும்ரா ஃபிட்டாகி முழுமையாக விளையாடுவது அவசியம் என்று அந்நாட்டின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். அதற்கு பும்ராவுக்கு போதுமான ஓய்வு கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவது முக்கியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்திய வேகப்பந்து வீச்சு துறையில் பும்ரா, ஷமியுடன் ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளர் வெற்றிக்கு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி இயன் சேப்பல் கூறியது பின்வருமாறு. “ஒரு பெரிய சுற்றுப்பயணத்தின் முன்பாக நாங்கள் டென்னிஸ் லில்லியை (முன்னாள் ஆஸ்திரேலிய பவுலர்) பருத்தி கம்பெனிக்குள் பத்திரமாக வைத்திருக்க பரிந்துரைப்பேன். இது பற்றி லில்லி என்னிடம் “பேட்ஸ்மேன் போல நானும் ஃபார்மில் இருப்பது அவசியம். நான் 5 விக்கெட்டுகளை நீங்கள் என்னை பருத்தி கம்பளிக்குள் போடுவதைப் பற்றி பேசுவீர்கள்” என்று வலுவாக கூறினார்”

- Advertisement -

டென்னில் லில்லி கதை:

“அதே போல ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு பும்ரா ஃபார்மில் இருப்பது அவசியம். அவர் 5 போட்டிகளில் பிட்டாகி விளையாட வேண்டும். இந்த சமநிலையை ஏற்படுத்தும் கடினமான வேலையை ஆஸ்திரேலியாவின் ஹீரோ டென்னிஸ் லில்லி 1972 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கச்சிதமாக செய்ததை காட்டும். அதே போல ஷமி ஆஸ்திரேலியாவில் ஃபிட்டாக விளையாடுவது அவசியம்”

இதையும் படிங்க: வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்ய அஜய் ஜடேஜா அட்வைஸ் தான் காரணம்.. ரிஷப் பண்ட் பேட்டி

“ஆனால் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருப்பது இந்தியாவின் வெரைட்டியை இன்னும் முன்னேற்றம். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரால் சுழல் பந்து வீச்சு கூட்டணி நல்ல கையில் இருக்கிறது. அதே சமயம் ஆஸ்திரேலிய மைதானங்களில் குல்தீப் யாதவ் திறமையை நான் தள்ளுபடி செய்ய மாட்டேன்” என்று கூறினார்.

- Advertisement -