- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட், ரோஹித் முடிஞ்சு போனவங்க.. ஆஸி அந்த 2 இந்திய வீரர்களை சாய்க்கனும்.. இயன் சேப்பல், மார்க் டெய்லர்

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 தொடர்களையும் இந்தியா அடுத்தடுத்து வென்று வரலாறு காணாத சாதனை படைத்தது. அதே போல இம்முறையும் வென்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதற்கு கடந்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய புஜாரா, ரகானே ஆகியோரின் இடங்களில் இம்முறை கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. ஆனால் 36 வயதாகிவிட்ட அவர்கள் தற்போது நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா தோற்கும் அளவுக்கு சுமாராக செயல்படுகின்றனர். அதனால் இம்முறை ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியா வெற்றி பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

காலம் கடந்துட்டாங்க:

இந்நிலையில் ரோஹித், விராட் கோலி ஆகியோர் காலம் கடந்து சுமாராக விளையாடுவதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இளம் வீரர்களை குறி வைத்து வீழ்த்த வேண்டுமென முன்னாள் வீரர் மார்க் டெய்லர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி இயன் சேப்பல் பேசியது பின்வருமாறு.

“இந்தியா தங்களுடைய பேட்டிங்கில் சில பிரச்சனைகளை கொண்டுள்ளது. ஜெய்ஸ்வால் நல்ல இளம் இடது கை ஓப்பனராக தெரிகிறார். சுப்மன் கில் நன்றாக விளையாடுவார் என்று நினைக்கிறேன். பின்னர் அவர்களிடம் வயதாகும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்ளனர். நீங்கள் சுமாராக செயல்படும் போது இவர்களுக்கு வயதாகி விட்டதா? என்று மக்கள் பேச துவங்குவார்கள்”

- Advertisement -

இந்தியாவின் பிரச்சனை:

“அந்த வயதிலேயே அந்த இருவரும் உள்ளார்கள். ஆஸ்திரேலியாவுக்கு வரும் போது பிட்ச்கள் நன்றாக இருக்கும். ஆனால் அங்கே கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கும். ஒருவேளை அதற்கு மேலே அவர்கள் சென்றால் அந்த எக்ஸ்ட்ரா பவுன்ஸ் அவர்களை அவுட்டாக்கலாம்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் மார்க் டெய்லர் பேசியது பின்வருமாறு.

“ஜெய்ஸ்வால், கில் ஆகிய தேவையான இளம் ரத்தத்தை இந்தியா தங்கள் அணியில் பாய்ச்சியுள்ளது. எனவே அந்த 2 இளம் வீரர்களுக்கு எதிராக அசத்தும் வழியை ஆஸ்திரேலியா கண்டறிய வேண்டும் என்று நினைக்கிறேன். புஜாரா, ரஹானே ஆகியோரிடம் இருந்து இந்தியா நகர்ந்துள்ளது. இருப்பினும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய சிறந்த 2 வீரர்கள் அவர்களிடம் உள்ளார்கள். ஆனால் அவர்கள் தற்போது சுமாரான நிலையில் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க: மும்பையில் நாங்க அந்த சதி பண்ணல.. விராட், ரோஹித்தை நாமளே பாராட்டுவோம் பாருங்க.. அபிஷேக் நாயர்

“நீங்கள் எதிர்பார்க்கும் ரன்களை அந்த சீனியர்கள் எடுக்கவில்லை. அது பண்ட், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் மீது அழுத்தத்தை உண்டாக்கும். எப்படி இருந்தாலும் உங்களின் ஒரு பேட்ஸ்மேன் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும். அது கடந்த 12 – 18 மாதங்களாக இந்திய அணியில் காணப்படவில்லை” என்று கூறினார்.

- Advertisement -