செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் தற்போது பாதி முடிந்துவிட்டது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 10 போட்டிகளில் விளையாடி முடித்தாகிவிட்டது. டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற அணிகள் வழக்கத்திற்கு மாறாக அதிரடியாக செயல்பட்டு வருகின்றன. இளம் வீரர்கள் பலர் அதிகமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இத்தொடரில் சஞ்சு சாம்சன், கில், திவாதியா அதனைத் தொடர்ந்து பந்துவீச்சாளர்கள் முருகன் அஸ்வின், தங்கராசு நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்ற பல வீரர்களும் தங்களது திறமைகளையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர் .
இந்நிலையில் தற்போது எந்த எந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய வர்ணனையாளருமான இயான் பிஷப் தற்போது வரை நடந்துள்ள ஐபிஎல் போட்டிகளை வைத்து மிகச்சிறந்த ஐபிஎல் அணியை தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார்.
இந்த அணியில் தொடக்க வீரர்களாக பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் சென்னை அணியின் துவக்க வீரர் டூபிளெஸ்ஸிஸ் ஆகியோர் இருக்கின்றனர். மேலும் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து மும்பை அணியின் மூன்றாவது வீரர் சூர்யகுமார் யாதவ் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்த பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை அணியின் ஆல்-ரவுண்டர் கெரோன் பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக ரஷீத் கான் மற்றும் பெங்களூர் அணியின் யூஜவேந்திரா சாகல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, காகிசோ ரபாடா மற்றும் பும்ரா ஆகியோர் தெரிவு செய்யப் பட்டிருக்கின்றனர்.
இந்த அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, டிவில்லியர்ஸ், கெயில் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் போன்ற சீனியர் வீரர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இயான் பிஷப் தேர்வு செய்த அணி இதோ :
கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), டூபிளசிஸ், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், கீரன் பொலார்டு (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரசீத் கான், முகமது ஷமி, காகிசோ ரபாடா, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.