கடந்த 10 ஆண்டுகளில் இதுவே பெஸ்ட் லெவன் அணி. 3 இந்திய வீரர்கள் தேர்வு. கேப்டன் யார் தெரியுமா ? – இயான் பிஷப் தேர்வு

Bishop
- Advertisement -

சமீபகாலமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த ஒருநாள் அணிகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் இயான் பிஷபும் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். இந்த அணியை அவர் கடந்த 10 ஆண்டுகளில் விளையாடிய சர்வதேச வீரர்களை வைத்து மிகச்சிறந்த ஒருநாள் அணியாக தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். இவரின் இந்த தேர்வு சிறப்பான ஒன்றாகவே இருக்கிறது.

Bishop 1

- Advertisement -

கிரிக்பஸ் இணையதளத்தில் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே அவருடன் உரையாடிய போது, அவர் இதனை பகிர்ந்துகொண்டார். இவரது அணியில் துவக்க ஆட்டக்காரராக அதிரடி வீரர் ரோகித் சர்மா மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் இவர்கள் இருவரும் தங்களது அணிக்காக அதிரடியான துவக்கத்தை கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமின்றி இங்கிலாந்தில் நடந்து முடிந்தஉலகக்கோப்பை தொடரில் இவர்கள் இருவருமே அதிக ரன்கள் குவித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இடத்திற்கு சந்தேகமே இல்லாமல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம் பிடித்துள்ளார். ஏனெனில் சர்வதே கிரிக்கெட்டில் அறிமுகமான நாட்களில் இருந்து 10 வருடங்களுக்கும் மேலாக தனது சிறப்பான ஆட்டத்தினை நிலையாக கோலி வழங்கி வருவதால் சந்தேகமின்றி அவர் அந்த இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 ஆம் நிலை வீரர்களில் இவரே உலகின் தலைசிறந்த வீரர் என்பதாலும் அவருக்கு இந்த அணியில் இடம் கொடுத்துள்ளார் பிஷப்.

Rohith-2

அடுத்த வரிசையில் தென்னாப்பிரிக்காவின் அதிரடி மன்னன் ஏபி டிவிலியர்ஸ் நான்காவது இடத்திற்கும், ஐந்தாவது இடத்தில் ராஸ் டைலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவரும் போட்டியின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தங்களது பேட்டிங்கை நிலையாகவும், அதிரடியாக ஆடக்கூடியதில் வல்லவர்கள். அவர்களின் இந்த தனித்துவமே இந்த இடத்தினை பெற்றுத்தந்துள்ளது.

- Advertisement -

அதற்கு அடுத்த ஆல்ரவுண்டர் பட்டியலில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இடம் பெற்றுள்ளார். இது சற்று வித்தியாசமான தேர்வாக இருக்கிறது. இருப்பினும் இந்த அணி கடந்த 10 ஆண்டுகளை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் வங்கதேச சீனியர் ஆல்ரவுண்டரான சாகிப் அல் ஹசன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவரும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார் என்றால் அது முற்றிலும் உண்மையே.

Dhoni

பின்னர் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக இந்திய அணியின் முன்னணி வீரரான தோனியை தேர்வு செய்துள்ளார். கேப்டன் பதவிக்காக இவர் செய்த இந்த தேர்வு மிகச் சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. இவர் தான் கடந்த பத்தாண்டுகளில் தலை சிறந்த கேப்டன் எனவும் கூறியுள்ளார் . பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் இலங்கையின் லசித் மலிங்கா தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர் .

மேலும் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளறை மட்டும் தேர்வு செய்துள்ளார். அது ஆப்கானிஸ்தானின் இளம்வீரரான ரஷித் கான் ஆவார். இயான் பிஷப் தேர்வு செய்த அணி : ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ், ரோஸ் டெய்லர், ஷாகிப் அல் ஹசன், எம்.எஸ். தோனி(கே), மிட்செல் ஸ்டார்க், டேல் ஸ்டெய்ன், லசித் மலிங்கா, ரஷீத் கான்.

Advertisement