எங்கள் ஹீரோ சச்சினை முந்துவாரா தெரியாது.. ஆனா ஜோ ரூட் ஏற்கனவே இதை செஞ்சுட்டாரு.. இயன் பெல்

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்கள் குவித்த வீரராக உலக சாதனை படைத்துள்ளார். தம்முடைய 16 வயதில் அறிமுகமாகி 24 வருடங்கள் 200 போட்டிகளில் விளையாடிய அவர் 15921 ரன்கள் குவித்து அந்த சாதனையை படைத்துள்ளார். அந்த சாதனையை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலஸ்டர் குக் கிட்டத்தட்ட நெருங்கியும் உடைக்காமல் தவற விட்டார்.

ஆனால் தற்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 146 போட்டிகளில் 12402 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது 33 வயதாகும் அவர் இன்னும் 4 வருடங்கள் விளையாடி 3000 – 4000 ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை உடைத்து அவர் புதிய சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

ஹீரோ சச்சின் டெண்டுல்கர்:

சொல்லப்போனால் சச்சினை முந்தி ஜோ ரூட் உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக ரிக்கி பாண்டிங், தினேஷ் கார்த்திக், மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டில் தங்களைப் போன்றவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் ஹீரோ என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் இயன் பெல் தெரிவித்துள்ளார்.

எனவே அவரை ஜோ ரூட் முந்தினால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை சச்சின் சாதனையை உடைக்க முடியாவிட்டாலும் ஜோ ரூட் இங்கிலாந்தின் மகத்தான பேட்ஸ்மேனாக இப்போதே சாதனை படைத்துள்ளதாக இயன் பெல் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜோ ரூட் கடந்த 12 மாதங்களாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்”

- Advertisement -

இங்கிலாந்தின் மகத்தான ரூட்:

“வருங்காலத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி அவர் அதிகம் சிந்திப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் தற்சமயத்தில் இருப்பதில் வாழ்கிறார். சச்சின் டெண்டுல்கர் இந்த விளையாட்டின் உண்மையான மகத்தானவர். இந்தியாவில் உள்ள மக்கள் மற்றும் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ளவர்களுக்கு அவர் ஹீரோ. அவரைப் பார்த்து நாங்கள் வளர்ந்தோம்”

இதையும் படிங்க: அவருக்கு விட்டுக் கொடுத்துட்டாரு.. இனிமேல் விராட் கோலியால் சச்சின் சாதனையை உடைக்க முடியாது.. ப்ராட் ஹோக் பேட்டி

“அவரை ஜோ ரூட் நெருங்குவது உண்மையில் பெரிய சாதனையாக இருக்கும். அதே சமயம் சச்சின் டெண்டுல்கரை முந்துகிறாரா இல்லையா என்பதைத் தாண்டி அவர் இங்கிலாந்தின் மகத்தான பேட்ஸ்மேனாக செல்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார். எது எப்படியாக இருந்தாலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒரு இந்தியர் உடைக்க வேண்டும் என்பதே இந்தியாவில் உள்ள ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Advertisement