இந்திய வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்தை வீழ்த்த இலங்கை போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. வெளியான அறிவிப்பு

Srilanka Team
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மோசமாக தோற்றது. ஆனால் அடுத்ததாக நடைபெற்ற டி20 தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இலங்கை வென்றது. அதனால் 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரை வென்று இலங்கை சாதனை படைத்தது.

குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு கூட தகுதி பெறாத இலங்கை தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவை தோற்கடித்தது. அந்த வெற்றி இலங்கை ரசிகர்களிடம் மிகப்பெரிய கொண்டாட்டத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

புதிய திட்டம்:
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்குகிறது. இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து நட்சத்திர வீரர் இயன் பெல் தங்களுடைய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதாக இலங்கை வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்காக இயன் பெல் 118 போட்டிகளில் 7727 ரன்களை குவித்து நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

குறிப்பாக அங்குள்ள ஸ்விங் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலைகளில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பல டாப் அணிகளுக்கு அவர் சவாலை கொடுத்து அனுபவத்தை கொண்டவர். எனவே இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் மட்டும் அவர் இலங்கை அணியின் பிரத்தியேக பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இது பற்றி அந்நாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போதைய சுற்றுப்பயணத்தில் முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் இயன் பெல்லை எங்களுடைய தேசிய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இலங்கை வாரியம் நியமித்துள்ளது. அணியுடன் ஆகஸ்ட் 16 முதல் இணையுள்ள அவர் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் முடியும் வரை பயிற்சியாளராக செயல்படுவார். 118 டெஸ்ட் போட்டிகளில் அவர் 7727 ரன்களை 42.69 சராசரியில் குவித்துள்ளார்” என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க: கம்பீர் மாதிரி ஆள்கிட்ட மாட்டிருக்கீங்க.. மாற்றத்துடன் விளையாடுங்க.. பாகிஸ்தான் வீரர்களுக்கு பாண்டிங் அட்வைஸ்

இதன் வாயிலாக இங்கிலாந்தை அதனுடைய முன்னாள் வீரரை வைத்தே சாய்ப்பதற்கான திட்டத்தை இலங்கை கையில் எடுத்துள்ளது என்று சொல்லலாம். இந்த அறிவிப்பு இலங்கை ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சனாத் ஜெயசூர்யா அந்தத் தொடரில் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவது இலங்கைக்கு இன்னும் பலத்தை சேர்க்கும் அம்சமாக பார்க்கப்படுகிறது.

Advertisement