வீடியோ : ஈ சாலா கப் நம்தே, அடுத்தடுத்து 3 – 4 கப் தட்டி தூக்க போறாங்க பாருங்க – ஆர்சிபி வருங்காலம் பற்றி ஏபிடி பேசியது என்ன

ABD
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசனை வரும் 2023ஆம் ஆண்டு இந்தியாவிலேயே நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ செய்து வருகிறது. அதற்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் வீரர்கள் ஏலம் நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக அனைத்து தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டு தேவையற்ற வீரர்களை விடுவித்துள்ளது. அதில் காலம் காலமாக முதல் கோப்பை வெல்ல முடியாமல் தவித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் இம்முறை புதிய கேப்டனாக அறிவித்த பஃப் டு பிளேஸிஸ், நம்பிக்கை நாயகன் விராட் கோலி, 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்குள் கம்பேக் கொடுக்கும் அளவுக்கு மிரட்டிய தினேஷ் கார்த்திக் போன்ற முக்கிய வீரர்களை தக்க வைத்துள்ளது.

பொதுவாகவே ஒரு சில தோல்விகளை சந்தித்தால் அதற்காக பதற்றமடைந்து அதிரடியான மாற்றங்கள் என்ற பெயரில் சொதப்பலை செய்வதால் தோல்விகளை பரிசாக சந்திக்கும் பெங்களூரு அணி இம்முறை ஏலத்துக்கு முன்பாக பெரிய மாற்றங்களை செய்யவில்லை. முன்னதாக வரலாற்றில் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், டேனியல் வெட்டோரி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களின் தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற தரமான வீரர்கள் விளையாடியும் ஏதோ ஒரு முக்கிய தருணத்தில் சொதப்பும் பெங்களூரு அணி இதுவரை முதல் கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது.

- Advertisement -

ஒன்னு வாங்கிட்டா போதும்:

குறிப்பாக விராட் கோலி தலைமையில் 2013 முதல் 2021 வரை உயிரைக் கொடுத்து போராடியும் ஏதோ ஒரு முக்கிய கட்டத்தில் சொதப்பி வெளியேறிய பெங்களூரு அணி காலம் காலமாக ரசிகர்களால் கிண்டல்களுக்கு உள்ளான அணிகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்றே கூறலாம். அதிலும் ஈ சாலா கப் போன்ற அந்த அணி ரசிகர்களின் கோஷங்கள் எதிரணி ரசிகர்கள் பெங்களூருவை கலாய்ப்பதற்கு அதிக உந்துதலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

இந்நிலையில் அடுத்த வருடம் பெங்களூரு முதல் கோப்பையை வென்று விட்டால் அதன் பின் 2, 3, 4 கோப்பைகளை அடுத்தடுத்து வெல்லும் என தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் மற்றும் அந்த அணியின் ஆணிவேராக செயல்பட்டு கடந்த வருடம் ஓய்வு பெற்ற ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். வருங்காலங்களில் பெங்களூரு அணியில் பயிற்சியாளராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது வரை ஐபிஎல் தொடரில் எத்தனை சீசன்கள் நடைபெற்றுள்ளது? அனேகமாக 14 அல்லது 15 என எதுவாக இருக்கட்டும். அதை பெங்களூரு அணி உடைக்க விரும்புகிறார்கள். இம்முறை ஆர்சிபி கோப்பையை வென்றால் அதே புத்துணர்ச்சியுடன் அவர்கள் விரைவில் 2, 3, 4 கோப்பைகளை கூட எளிதாக வெல்வார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். டி20 கிரிக்கெட்டில் குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில் சில நேரங்களில் எதிர்பாராத எதுவும் நடக்கலாம். ஆனால் இம்முறை பெங்களூரு வெற்றியை தனது பக்கம் திருப்பும் என்று நம்புகிறேன்”

“மேலும் பெங்களூரு அணியை நான் மிகவும் நேசிக்கிறேன். சொல்லப்போனால் அது என்னுடைய மற்றொரு உலகம் எனலாம். அது என்னுடைய வாழ்க்கையை மாற்றியது. 2011 முதல் அதில் இருக்கும் நான் என்னுடைய வாழ்க்கைக்கு தேவையான நண்பர்களை அங்கே உருவாக்கியுள்ளேன். அது எனக்கும் என்னுடைய குடும்பத்திலும் ஒரு பகுதியாக மாறியுள்ளது. அந்த வகையில் நாங்கள் ஆர்சிபியைச் சேர்ந்தவர்கள். ஈ சாலா கப் நம்தே” என்று நிகழ்ச்சியுடன் பேசினார்.

இதையும் படிங்க: உடம்பை குறைக்கும் வரை ஒன்னும் நடக்காது, ரோஹித் சர்மாவின் தடுமாறுவதன் காரணத்தை அம்பலமாக்கும் சல்மான் பட்

முன்னதாக பெங்களூரு அணிக்காக எத்தனையோ போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஏபி டீ வில்லியர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஆகியோரை இந்த வருடம் “ஆர்சிபி ஹால் ஆஃப் ஃபேம்” என்ற விருதை வழங்கி அந்த அணி நிர்வாகம் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement