என்ன மேஜிக்ன்னு தெரியல.. 5 வருஷமாச்சு.. ஜடேஜாவை கிரிக்கெட்டரா வளத்துருக்கக் கூடாது.. அப்பா வேதனை பேட்டி

Ravindra Jadeja Father
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பவுலிங் ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளில் முக்கிய பங்காற்றி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் உலக அரங்கில் மகத்தான ஆல் ரவுண்டர்களில் ஒருவராக போற்றப்படும் அவர் தற்சமயத்தில் 3 வகையான இந்திய அணியிலும் இன்றியமையாத வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு திருமணமான சில மாதங்களிலிருந்தே தன்னிடம் பேசுவதில்லை என்று அவருடைய தந்தை அனிருத்சிங் ஜடேஜா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக தம்முடைய மகனின் மனைவி ரவிபா என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை அப்போதிலிருந்தே ஜடேஜா தங்களை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

- Advertisement -

அப்பாவின் வேதனை:
அதனால் ரவீந்திர ஜடேஜாவை ஏன் கிரிக்கெட்டராக வளர விட்டோம் என்று தற்போது வருந்துவதாகவும் கூறும் அவர் இது பற்றி டெய்லி குஜராத்தி எனும் ஊடகத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுக்கு ஒரு உண்மையை நான் சொல்லட்டுமா? தற்போது நான் ரவீந்திர ஜடேஜா மற்றும் அவருடைய மனைவி ரவிபாவுடன் எந்த உறவிலும் இல்லை. நாங்கள் அவரை அழைப்பதில்லை. அவரும் எங்களை கூப்பிடுவதில்லை”

“பிரச்சனை திருமணமான சில மாதங்களில் துவங்கியது. இப்போது நாங்கள் ஜம்நகரில் இருக்கிறோம். ஜடேஜா தன்னுடைய பங்களாவில் இருக்கிறார். ஒரே நகரத்தில் இருந்தாலும் நான் அவரை பார்ப்பதில்லை. அவருடைய மனைவி என்ன மேஜிக் செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் என்னுடைய மகன். தற்போதைய நிலைமையை நினைத்து என்னுடைய மனம் எரிகிறது. அவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்”

- Advertisement -

“ஒருவேளை அவர் கிரிக்கெட்டராக வராமல் இருந்திருந்தால் கூட தற்போது நாங்கள் இந்த நிலைமையை சந்தித்திருக்க மாட்டோம். திருமணம் நடந்த 3 மாதத்திற்குள் சொத்துக்கள் அனைத்தும் தன்னுடைய பெயரில் வரவேண்டும் என்று என்னிடம் சொன்ன அவருடைய மனைவி குடும்பத்தில் பிளவை உண்டாக்கினார். ஒன்றாக வாழ விரும்பாத ஜடேஜாவின் மனைவி வாழ்க்கையில் தனியாக செல்ல விரும்பினார். ஒருவேளை ரவிபாவின் தங்கையும் நானும் பொய் சொல்லலாம்”

இதையும் படிங்க: நான் எப்போதும் இந்தியன்.. பொறாமைல அப்படி பேசுறத நிறுத்துங்க.. பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு ஷமி பதிலடி

“ஆனால் எங்களுடைய குடும்பத்தில் இருக்கும் 50 பேரும் எப்படி இதைப்பற்றி பொய் சொல்வார்கள்? தற்போது ஜடேஜா எங்களுடைய குடும்பத்தில் யாரிடமும் உறவில் இல்லை. வெறுப்பில் இருக்கிறார். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. எங்களுடைய பேத்தியை 5 வருடங்களாகியும் இதுவரை நான் பார்க்கவில்லை. ஜடேஜாவின் மாமியார் எல்லாவற்றையும் நீக்கியுள்ளார். அவர்கள் தற்போது வசதியாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்று வேதனையுடன் பேசியுள்ளது ரசிகர்களிடம் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement