- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனியிடம் பேசி 10 வருஷம் ஆச்சு.. நாங்க பேசிக்கிறதில்ல.. காரணம் இது தான்.. ஹர்பஜன் ஆதங்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியுடன் தாம் பேசுவதில்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். தோனி தலைமையில் இந்தியா 2007 டி20 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை வெல்வதற்கு ஹர்பஜன் சிங் முக்கிய பங்காற்றினார். அதே போல ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியில் தோனி தலைமையில் விளையாடிய ஹர்பஜன் 2018 கோப்பையை வெல்வதற்கு உதவினார்.

இருப்பினும் 2011 உலகக் கோப்பைக்கு பின் வருங்காலத்தை வளமாக்குவதற்காக அஸ்வின், ஜடேஜாவை தேர்ந்தெடுத்த தோனி அவரை கழற்றி விட்டார். அதன் காரணமாக தமது கேரியரின் கடைசி காலங்களில் தோனி வாய்ப்பு கொடுக்கவில்லை என்று ஹர்பஜன் பலமுறை விமர்சித்துள்ளார். அந்த சூழ்நிலையில் தோனியிடம் கடந்த 10 வருடங்களாக பேசவில்லை என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தோனியிடம் பேசுவதில்லை:

அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இல்லை. நான் தோனியுடன் பேசுவதில்லை. சிஎஸ்கே அணியில் விளையாடிய போது தான் கடைசியாக அவருடன் பேசினேன். மற்றபடி அவருடன் 10 வருடங்களாக பேசவில்லை. அதற்கான காரணம் என்னிடமும் இல்லை. அவரிடமும் இருக்காது. அதற்கான காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. சிஎஸ்கே அணியில் விளையாடிய போது கூட களத்தில் மட்டுமே நாங்கள் குறைவாகவே பேசுவோம்”

“போட்டி முடிந்த பின் அவர் என்னுடைய அறைக்கு வரமாட்டார். நானும் அவர் அறைக்கு சென்று பேச மாட்டேன். அவருக்கு எதிராக எனக்கு எதுவும் இல்லை. ஒருவேளை தோனியிடம் ஏதாவது காரணம் இருந்தால் அவர் சொல்லலாம். ஒருவேளை காரணம் இருந்திருந்தால் அதை தோனி இந்நேரம் தெரிவித்திருப்பார். நான் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்ததும் கிடையாது. ஏனெனில் என்னுடைய அழைப்பை ஏற்பவர்களை மட்டுமே நான் அழைப்பேன்”

- Advertisement -

புரியாத காரணம்:

“அது போக எனக்கு நேரமும் இல்லை. என்னிடம் தொடர்பில் உள்ள நண்பர்களிடம் மட்டுமே நான் பேசுவேன். பொதுவாக நட்புறவு என்பது மரியாதையை பொறுத்தது. நீங்கள் என்னை மதித்தால் நானும் உங்களை மதிப்பேன். நான் உங்களுக்கு ஒன்றுக்கு இரண்டு முறை தொலைபேசியில் அழைத்தேன். ஆனால் அதற்கு எனக்கு பதில் கிடைக்கவில்லை”

இதையும் படிங்க: 101 ரன்ஸ்.. வெ.இ அணியை திரும்பி தெறிக்க விட்ட வங்கதேசம்.. 15 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி

“அதன் காரணமாக இனிமேல் எனக்கு தேவைப்பட்டால் மட்டுமே உங்களை நான் பார்ப்பேன்” என்று கூறினார். அதாவது தாம் தொலைபேசியில் அழைத்தும் தோனி எடுக்கவில்லை என்பதால் அவரிடம் பேசுவதில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று தமக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -