வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் 201 ரன்கள் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி நவம்பர் 30ஆம் தேதி ஜமைக்கா நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதை அடுத்து களமிறங்கிய வங்கதேசம் சுமாராக பேட்டிங் செய்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சாத்மன் இஸ்லாம் 64, கேப்டன் மெஹதி ஹசன் 36 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜெய்டேன் சீல்ஸ் 4, சமர் ஜோசப் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை அதை விட அபாரமாக பந்து வீசிய வங்கதேசம் 146க்கு ஆல் அவுட்டாக்கி தெறிக்க விட்டது.
வங்கதேசம் அபாரம்:
வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக கேசி கார்ட்டி 40, கேப்டன் ப்ரத்வெய்ட் 39 ரன்கள் எடுத்தார்கள். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக நகிட் ராணா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் 19 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 268 ரன்கள் குவித்து அசத்தியது.
அதிகபட்சமாக ஜாகிர் அலி 91, கேப்டன் மெஹதி ஹசன் 42, சாத்மன் இஸ்லாம் 46 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 3, கெமர் ரோச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இறுதியில் 287 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் வங்கதேசத்தின் அபார பந்து வீச்சில் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 185 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.
சாதனை வெற்றி:
அதிகபட்சமாக காவெம் ஹோட்ஜ் 55, கேப்டன் ப்ரத்வெய்ட் 43 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணிக்கு அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு தக்க பதிலடி கொடுத்து 1 – 1 (2) என்ற கணக்கில் இந்த தொடரை வென்று அசத்தியது.
இதையும் படிங்க: இந்திய அணிக்காக ரோஹித் சர்மா இந்த தியாகம் செய்வாரு.. பெரிய வித்யாசம் இருக்காது.. சஞ்சய் மஞ்ரேக்கர்
அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 15 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று வங்கதேசம் சாதனையும் படைத்தது. இந்த வெற்றிக்கு முன் கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விளையாடிய 7 போட்டிகளில் அந்த அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தது. அந்த தோல்விகளை நிறுத்திய வங்கதேசம் தற்போது வெற்றி பெற்று சமீபத்தில் இந்தியாவிடம் சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்தது.