சேவாக் மாதிரி எனக்கு சுதந்திரமான சான்ஸ் கிடைச்சுருந்தா இந்நேரம் – தமிழக வீரர் பரபரப்பாக குற்றசாட்டு

Virender Sehwag Murali Vijay
Advertisement

தமிழக நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான முரளி விஜய் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் அசத்தியதால் கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பம் முதலே ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறிய அவர் 17 போட்டிகளில் வெறும் 339 ரன்களை 21.18 என்ற சுமாரான சராசரியில் எடுத்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 61 போட்டிகளில் 3982 ரன்களை 38.29 என்ற சராசரியில் எடுத்து ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். இருப்பினும் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு தொடர்ந்து சிறப்பாக செயல்பட தவறிய அவர் ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியிலிருந்து வெளியேறிய பின் சுமாராகவே செயல்பட்டார்.

,murali vijay

அதனால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி தலைமையில் வென்ற சரித்திர டெஸ்ட் தொடரில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வாய்ப்பு பெற்று சுமாராகவே செயல்பட்டார். அதன் பின் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கம் பேக் கொடுக்கும் அளவுக்கு அசத்தாத அவர் குடும்ப பிரச்சினை காரணமாக சில வருடங்களாக மொத்தமாகவே விளையாடுவதை தவிர்த்து விட்டார்.

- Advertisement -

சேவாக் மாதிரி:
அதிலிருந்து மீண்டு வந்து கடந்த டிஎன்பிஎல் தொடரில் விளையாடிய அவர் 38 வயதை கடந்து விட்டதால் இனியும் இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு முடிந்து போனதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் 30 வயதை கடந்து விட்டவர்களை இந்திய அணியில் 80 வயது தாண்டிய கிழவர்களைப் போல் பார்ப்பதாக தெரிவித்த முரளி விஜய் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு முடிந்து விட்டதாகவும் இனிமேல் வெளிநாடுகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை தேடி செல்வதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Sehwag

ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் முரட்டுத்தனமாக செயல்படும் சர்ப்ராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கே வாய்ப்பு கிடைக்காத நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் களமிறங்கி விளையாடாத உங்களுக்கு எப்படி வாய்ப்பு கொடுக்க முடியும் என்று அவருக்கு தமிழக ரசிகர்களே பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் வீரேந்திர சேவாக் போல தமக்கும் ஆதரவும் தொடர் வாய்ப்புகளும் கிடைத்திருந்தால் நிச்சயம் அவரைப்போலவே வந்திருப்பேன் என்று மீண்டும் முரளி விஜய் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி முன்னாள் வீரர் டபிள்யூவி ராமன் அவர்களுடன் சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் வீரேந்தர் சேவாக்கிற்கு இந்திய அணியில் கிடைத்த சுதந்திரமும் ஆதரவும் எனக்கு கிடைக்கவில்லை. சேவாக் தனது வாழ்நாளில் பெற்றுள்ள எதுவுமே எனக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை அவருக்கு கிடைத்த அதே மாதிரியான ஆதரவும் வெளிப்படையான பாராட்டு பேச்சுகளும் எனக்கும் கிடைத்திருந்தால் நானும் முயற்சித்திருக்கலாம்”

murali

“மற்றொரு உண்மையான விஷயம் என்னவெனில் அணியின் ஆதரவு உங்களுக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அதே அளவுக்கு நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் உங்களது அணிக்காக பங்காற்ற முடியும். இது ஒரு உயர்நிலைப் போட்டியாகும். அங்கே உங்களது பல்வேறு திட்டங்களை பல்வேறு வழிகளில் சோதனை செய்ய அதிக வாய்ப்புகள் இல்லை. மேலும் அந்த இடத்தில் சேவாக் இருந்த போது எனது உள்ளுணர்வை கட்டுப்படுத்தி விளையாடுவது கடினமாக இருந்தது. ஆனால் அந்த வகையான சுதந்திரத்தின் வழியாக அவர் செல்வதை பார்ப்பது அற்புதமான ஒன்றாக இருந்தது”

- Advertisement -

“அவரால் மட்டுமே அவ்வாறு விளையாடியிருக்க முடியும். சேவாக்கை போல் வேறு யாரும் விளையாட முடியாது. இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் செய்த செயல் ஆச்சரியமானது. அவர் வித்தியாசமானவர் என்பதை நான் கண்கூடாக பார்த்துள்ளேன். அவருடன் பழகி விளையாடு பாக்கியமும் எனக்கு கிடைத்தது. அவர் தனது மந்திரத்தை மிகவும் எளிமையாக வைத்திருந்தார். அதாவது பந்தை பார்த்து அடித்தார். குறிப்பாக 145 – 150 கி.மீ வேகத்தில் வீசுபவர்களை அவர் பாட்டு பாடிக் கொண்டே அடிப்பார். அது சாதாரணமல்ல மிகவும் வித்தியாசமான அனுபவமாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs AUS : எப்டியும் சாதகமான வழில தான் ஜெயிக்க போறீங்க, இந்தியாவை நியாயமின்றி விமர்சித்த இயன் ஹீலி – ரசிகர்கள் பதிலடி

இருப்பினும் சேவாக் ஆரம்பம் முதலே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் தொடர்ந்து வாய்ப்பை பெற்ற நிலையில் நீங்கள் அதே செயல்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தால் எப்படி வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும் என்றும் அவரது இந்த கருத்துக்கு தமிழக ரசிகர்கள் மீண்டும் பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement