17 வருஷத்துக்கு முன்னாடி கொடுத்த அந்த வாய்ப்புக்காக தோனிக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கேன்.. அஸ்வின் உருக்கம்

Aswhin dhoni
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100வது போட்டியில் விளையாடி சாதனை படைத்தார். அதில் 5 விக்கெட் ஹால் உட்பட மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்த அவர் தனது 100வது டெஸ்ட் போட்டியில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற முத்தையா முரளிதரன் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார்.

அத்துடன் அறிமுகப் போட்டியிலும் 100வது போட்டிகளும் 5 விக்கெட் ஹால் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனை அஸ்வின் படைத்தார். அந்த வகையில் தமிழ்நாட்டில் பிறந்து இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற வரலாறு படைத்த அஸ்வினுக்கு நேற்று சென்னையில் தமிழ்நாடு வாரியம் சார்பில் சிறப்பு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

- Advertisement -

தோனிக்கு நன்றி:
அதில் 500 விக்கெட்டுகளை எடுத்த அஸ்வினுக்கு 500 தங்க நாணயங்கள் கொண்ட சிறப்பு பரிசு, செங்கோல் மற்றும் 1 கோடி ரூபாய் காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பேசி அஸ்வினை பாராட்டினர். அதில் 2011 ஐபிஎல் ஃபைனலில் கிறிஸ் கெயில் விக்கெட்டை எடுத்து தமது தலைமையிலான ஆர்சிபி அணியை தோற்கடித்து சிஎஸ்கே கோப்பையை வெல்ல உதவிய அஷ்வினை ஜாம்பவான் கும்ப்ளே பாராட்டினார்.

அதற்கு அன்றைய நாளில் இளம் வீரராக இருந்த தம்மிடம் கிறிஸ் கெயில் போன்ற முரட்டுத்தனமாக அடிக்கக் கூடிய வீரருக்கு எதிராக பவர் பிளே ஓவரில் நம்பி பந்து வீசும் வழங்கும் வாய்ப்பை கொடுத்த தோனிக்கு தான் அந்த பாராட்டு செல்ல வேண்டுமென அஸ்வின் தெரிவித்தார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “மேத்தியூ ஹெய்டன், எம்எஸ் தோனி போன்ற மகத்தான ஜாம்பவான் வீரர்களை நான் 2008இல் சிஎஸ்கே அணியின் உடைமாற்றும் அறையில் சந்தித்தேன்”

- Advertisement -

“நான் 2008 சீசன் முழுவதும் அமர்ந்திருந்தேன். அப்போது முத்தையா முரளிதரன் இருந்ததால் நான் யார் என்று தெரியாதவராக இருந்தேன். இருப்பினும் என் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் தோனிக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் கிறிஸ் கெய்லுக்கு எதிராக புதிய பந்தில் பந்து வீசும் வாய்ப்பை எனக்கு கொடுத்தார். 17 வருடங்கள் கழித்து அனில் பாய் அதைப் பேசியுள்ளார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவுக்கு நடந்தது அநீதி இல்ல.. இந்த நல்ல விஷயத்தையும் பாருங்க.. ஆரோன் பின்ச் பேட்டி

முன்னதாக ஐபிஎல் துவங்கப்பட்ட ஆரம்பக்காலங்களில் சிஎஸ்கே அணியில் விளையாடிய அஸ்வினுக்கு கேப்டன் தோனி நிறைய ஆதரவு கொடுத்தார். அங்கு சிறப்பாக விளையாடிய காரணத்தால் அவருடைய திறமையை உணர்ந்த தோனி சர்வதேச கிரிக்கெட்டிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதை பயன்படுத்திய அஸ்வின் குறுகிய காலத்திலேயே ஹர்பஜனை முந்தி முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement