ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11வது சீசன் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.7ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கப்படவுள்ள ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அம்பதி ராயுடு திறமையான பேட்ஸ்மேன்களில் ஒருவர்.கடந்த 2010 ஆண்டு முதல் 2017 ம் ஆண்டுவரை ராயுடு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இவர் இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இரண்டாண்டு தடைக்கு பின்னர் களமிறங்கும் முன்னாள் சாம்பியனான சென்னை இந்த ஐபிஎல்-இல் மீண்டும் கோப்பையை தட்டிச்செல்ல முனைப்பு காட்டிடும் என்பதில் ஐயமில்லை.32வயதான ராயுடு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது சிறப்பாக செயல்பட்டவர்.
வியாழக்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராயுடு “ஐபிஎல்-இல் சென்னை அணிக்காக விளையாட உள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். எங்கள் அணி வலுவான அணியாக உள்ளது என்றும் இந்த ஐபிஎல்-இல் சென்னை அணிக்காக எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன் என்றும் பேசினார்.
மேலும் பேசிய அவர் அணிக்காக எந்த வரிசையிலும் இறங்கி சிறப்பாக விளையாட இப்போதே தயார் என்றார்.இந்த ஆண்டு ஏலத்தில் இதுவரை பிற அணிகளுக்காக ஐபிஎல்-இல் விளையாடிய மற்ற வீரர்களும் சிஎஸ்கே வுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.