பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு சமூகவளைத்தளத்தில் தன்னுடைய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர். தற்போது ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இரண்டாம் இன்னிங்ஸில் பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் திட்டமிட்டு அடிக்கடி பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. பின்னர் அவர் ஆட்டத்தின் நடுநடுவே தன் பேன்டிற்குள் இருந்து மஞ்சள் நிறத்தில் ஒரு பொருளை எடுத்து பந்தில் தேய்க்கும் காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தது.
பின்னர் இந்த புகார் நடுவர்களிடம் சென்றது. நடுவர்கள் விசாரித்த போது கேமரூன் பேன்கிராப்ட் முதலில் மறுத்தார். தான் கருப்பு துணி மட்டுமே வைத்திருந்ததாக கூறினார். பின்னர் மாலையில் பேசிய அவர் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். மேலும் அணியிலுள்ள சில மூத்த வீரர்களின் ஆலோசனைப்படியே தான் அப்படி செய்ததாகவும் கூறினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய செயல் தனக்கும் தெரிந்தே நடந்தது எனவும் இனிமேல் அதுபோல நடக்காது எனவும் கூறினார்.
பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து விசாரணை நடத்திய ஐசிசி கேமரூன் பேன்கிராப்ட்டிற்கு 75% அபராதமும், அணி கேப்டனான ஸ்டீவன் ஸ்மித்திற்கு 100% அபராதத்துடன் கூடிய ஒரு டெஸ்டில் விளையாடுவதற்கான தடையையும் விதித்தது.இந்த பிரச்சனையை மிகவும் சீரியஸாக எதிர்நோக்கியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பதை பற்றி யோசித்துவருவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலிய நிர்வாகம் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னருக்கு சர்வதேச கிரிக்கெட் விளையாட ஒரு வருட தடை விதித்தது.இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பும் முன் வார்னர் சமூகவலைத்தளத்தில் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
— David Warner (@davidwarner31) March 29, 2018
அந்த பதிவில் “நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். நான் செய்த தவறுக்கு நானே பொறுப்பு. தற்போது நான் சிட்னி திரும்பி கொண்டிருக்கின்றேன்.இந்த சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட துன்பம் என்ன என்பதை நான் தற்போது புரிந்து கொண்டேன். கிரிக்கெட்டை தீவிரமாக காதலித்து வருபவன் நான். தற்போது இந்த ஓய்வை என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், என் நலம் விரும்பிகளுடன் கழிக்கவுள்ளேன் என்றார்.