ஹைதராபாத் அணிக்கு புது கேப்டன் நியமனம்! தவானுக்கு வாய்ப்பில்லை – யார் தெரியுமா ?

sikhar
- Advertisement -

இந்ந ஐபிஎல் சீசனில் விளையாட போகும் 8அணி கேப்டன்களும் இந்திய அணியை சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அந்த ஆசையில் மண் அள்ளி போட்டுள்ளது ஹைதராபாத் அணி நிர்வாகம்.தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரூன் பேன்கிராப்ட் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தியது வீடியோவில் அம்பலமானது.

dhawan

முதலில் மறுத்த அவர் பின்னர் சகவீரர்களின் தூண்டுதலின் பெயரில் தான் இந்த சம்பவம் நடந்தது எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.இதன் பின்னர் செய்த தவறை ஒப்புக்கொண்டு கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தும் வார்னரும் பதவி விலகினர்.

- Advertisement -

பின்னர் இந்த சம்பவத்தை விசாரித்த பின் ஐசிசி அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்க, ஆஸ்திரேலிய நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளது.ஆஸ்திரேலிய நிர்வாகம் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு வருட தடை விதித்த சற்று நேரத்தில் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரிலும் இவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா நேற்று அறிவித்திருந்தார்.

Kane

ராஜஸ்தான் அணி ஸ்மித்திற்கு பதிலாக ரஹானேவை கேப்டனாக நியமித்துள்ள நிலையில் ஹைதராபாத் அணிக்காக தவான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ஹைதராபாத் அணி நிர்வாகம் தற்போது தவானுக்கு அனுபமில்லாததால் கேப்டன் பதவி வழங்குவதை தவிர்த்து அவருக்கு பதிலாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனை கேப்டனாக நியமித்துள்ளது.

Advertisement