பாண்டிங் கிட்ட கூட இப்படி ஒரு குணம் இல்ல. ஆனா தோனி இருக்காரே எப்போவும் இப்படிதான் இருப்பார் – ஹஸ்ஸி புகழாரம்

Hussey
- Advertisement -

தோனி இந்திய அணிக்காக 2007 ஆம் ஆண்டிலிருந்து கேப்டனாக இருந்து வந்தார். கிட்டத்தட்ட பத்து வருட காலத்தில் அவர் படைக்காத சாதனைகள் இல்லை. வித்தியாசமான அணுகு முறையும் ஆட்டத்தின் போக்கை கவனிக்கும் திறனையும் அவருக்கு பல கோப்பைகளை பெற்றுத் தந்துள்ளது. இவர் தலைமையில் விளையாடிய ஒவ்வொரு வீரரும் இவரது தலைமை பண்பு குறித்து அவ்வப்போது அளவளாவி புகழ்ந்து வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் தோனி தலைமையில் 6 சீசன்களாக ஐபிஎல் தொடரில் ஆடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கல் ஹசி தோனியின் தலைமை பண்பையும், ரிக்கி பாண்டிங் என் தலைமையை பண்பையும் குறித்து பேசியுள்ளார்.அவர் கூறுகையில்…

தோனி மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் வேறு வேறு விதமாக வேலை செய்வார்கள். ரிக்கி பாண்டிங் தனக்கு எதிரான வீரர்களை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார். தனது வீரர்களை தன்னுடன் எடுத்துச் சென்று வெற்றிக்கு அழைத்துச் செல்வார் .அதே நேரத்தில் மகேந்திர சிங் தோனி மிகவும் வித்தியாசமானவர்.

Ricky-Ponting

அவர் தனது உள்ளுணர்வை அதிகம் நம்புவார். கிரிக்கெட் போட்டியில் மீதான அதீத திறமை அவருக்கு இருக்கிறது. எளிதாகக் கணித்துவிடுவார். அமைதியாக இருந்து தனது வீரர்களை வழி நடத்துவார். தனது வீரர்களை எப்போதும் தன் கையிலேயே வைத்துக் கொள்வார் என்று பேசியுள்ளார் மைக்கேல் ஹசி.

மேலும் தோனி 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் சரி, 4 போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் சரி அவருடைய மனநிலையில் எந்த மாற்றமும் இருக்காது. அவர் எப்போதுமே கூலாக இருப்பார். அது அவரிடம் நான் கண்ட தனி தகுதி என்று கூறுவேன் என்று குறிப்பிட்டார். தோனியின் தலைமையில் 6 ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளார் தொடங்கி பல போட்டிகளில் சென்னை சூப்பர் கி.ங்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisement