என்னிடம் இல்லாத ஒன்றை நான் தோனியிடம் வியந்து பார்த்து கற்றுக்கொண்டேன் – மனம்திறந்த மைக்கல் ஹஸ்ஸி

Hussey
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் ஹஸ்ஸி அந்த அணியில் பெஸ்ட் பினிஷர்களில் ஒருவராக திகழ்ந்தவர். ஆட்டம் எவ்வளவுதான் கைமீறிப் போய்விட்டது என்றாலும் இறுதி வரை நிலைத்து நின்று தனியாளாக ஆடி ஆஸ்திரேலிய அணிக்கு பல போட்டிகளில் வெற்றியை அவர் பெற்றுக் கொடுத்திருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர் பல முக்கியமான போட்டிகளில் மறக்கமுடியாத வெற்றிகளை சென்னை அணிக்கு கொடுத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் பினிஷரான தோனியை பாராட்டி அவர் திறமை குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இஎஸ்பிஎன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடிய மைக்கல் ஹசி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உடன் டோனி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதுகுறித்து அவர் கூறுகையில் : கிரிக்கெட் உலகம் தோன்றியதிலிருந்து அனைத்து காலகட்டத்திலும் பெஸ்ட் பினிஷர் என்றால் அது தோனி தான். அவர் கூலாக இருந்தே எதிரணியை வீழ்த்தி விடுவார். மேலும் எதிர் அணிக்கு எதிரான அவர் வைக்கும் திட்டம் அந்த அணியின் கேப்டனை வியக்க வைக்கும். அது தோனியின் ஸ்பெஷல் என்று நான் நினைக்கிறன்.

Dhoni 1

அதுமட்டுமின்றி தோனி அசாத்திய சக்தி கொண்டவர் எப்போதும் தடைகளை எவ்வாறு உடைக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவருக்கு எந்த அளவிற்கு தன்னம்பிக்கை இருக்கிறதா அந்த தன்னம்பிக்கை என்னிடம் இல்லை என்று நான் சொல்வேன். அது தான் உண்மை என்று மனம் திறந்து கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் ஒருவர் 12 அல்லது 13 ரன்கள் எடுக்க முயற்சித்தும் என்னால் முடியவில்லை. ஆனால் நான் தோனியிடம் இருந்து அதனை கற்றுக் கொண்டேன். அவர் எப்போதும் கணிக்க முடியாத வீரர். அனைவரும் வெற்றியை இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது அவர் வெற்றியை பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை வைத்திருப்பார். அதனாலேயே அவர் கூலாக இருப்பார் இவ்வாறு அவர் இருப்பது பவுலர்களை அழுத்தத்தில் உள்ளாக்கும்.

hussey

பவுலர்கள் தவறு செய்யும் போது அதனை பயன்படுத்தி தோனி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார். தோனியும், பாண்டிங்கும் தோற்று விடுவோம் என தெரிந்தால் போட்டியை இழுத்து கொண்டிருக்க மாட்டார்கள். உடனே முடித்து விட்டார்கள் வெற்றியோ தோல்வியோ என நினைத்துக் குழப்பிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது..

Advertisement