அந்த 2 மேட்ச் போதும்.. இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் ஆசியக் கோப்பையை தூக்கும்.. பாக் வீரர் பேட்டி

Hussain Talat
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 4 இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை 20 ஓவரில் 133/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 50 ரன்கள் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி 3, ஹாரிஸ் ரவூப் 2, ஹுசைன் தாலத் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 138/5 ரன்களை அடித்து எளிதாக வென்றது. அதிகபட்சமாக முகமது நவாஸ் 38*, ஹுசைன் தாலத் 33* ரன்கள் எடுத்தனர். கடந்தப் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் 2வது போட்டியில் வென்றுள்ளது. அதனால் வங்கதேசத்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் வென்றால் ஃபைனலுக்கு செல்லலாம் என்ற நிலைக்கு பாகிஸ்தான் வந்துள்ளது.

- Advertisement -

இந்தியாவை வீழ்த்தி:

மறுபுறம் ஹஸரங்கா, தீக்சனா அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோற்ற இலங்கை ஃபைனலுக்கு தகுதி பெறுவது 90% அசாத்தியமாகியுள்ளது. பாகிஸ்தானின் இந்த வெற்றிக்கு 32* ரன்கள் 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தாலத் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் அடுத்தப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஃபைனலுக்கு சென்று அங்கேயும் வெற்றி பெற்று பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று தாலத் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா இதுவரை தோற்காமல் வெற்றி நடை போடுவதால் ஆசியக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடைசியில் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் வெல்லும் என்று மறைமுகமாக தெரிவிக்கும் தாலத் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு வங்கதேசம் வந்தது முதல் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம்”

- Advertisement -

ஆசியக் கோப்பை பாகிஸ்தானுக்கே:

“எங்களிடம் நிறைய ஆப்ஷன்கள் இருக்கிறது. எங்களுடைய அணி வீரர்கள் சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பி வருவது நல்ல விஷயமாகும். சிலர் முதல் 2 போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை. ஆனால் தற்போது அவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கிறது. அதையே நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க விரும்புவீர்கள். அப்படி தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் எங்களுடைய வீரர்கள் செயலில் பதில் கொடுப்பார்கள்”

இதையும் படிங்க: இனிமே எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் வேண்டாம்.. பி.சி.சி.ஐ க்கு கடிதம் அனுப்பிய ஷ்ரேயாஸ் ஐயர் – என்ன காரணம்?

“எங்களுக்கு இன்னும் (ஃபைனல் உட்பட) 2 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. ஒருவேளை அந்த 2 போட்டிகளிலும் நாங்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் கண்டிப்பாக கோப்பையை வெல்வோம். கடந்தப் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் நாங்கள் இப்போட்டியில் வெல்ல விரும்பினோம். எங்களுடைய தேசமும் வெல்ல விரும்பியதால் எங்களது சிறந்த ஆட்டத்தைக் கொடுத்தோம். நாங்கள் எங்களை சுற்றியிருக்கும் விமர்சனத்தை புறக்கணிக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement