ட்ரீம் 11 ஆப்பின் மூலம் எவ்வாறு பாயிண்ட்ஸ்களை பெறுவது தெரியுமா ? – அனைத்து விதிமுறைகளும் எளிய தமிழில்

Dream 11
- Advertisement -

தற்போது நடந்து வரும் நடப்பு பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் ட்ரீம் லெவன் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த ட்ரீம் லெவன் ஆப்பின் மூலம் எவ்வாறு ரசிகர்கள் புள்ளிகளைப் பெற்று பணத்தை ஆன்லைன் மூலமாக பெறுவது என்பது குறித்த ஒரு தெளிவான விவரத்தை இந்த பதிவில் நாம் விளக்கமாக காண உள்ளோம். அதன்படி ஒவ்வொரு போட்டியின் போதும் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இருந்து 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.

Dream-xi

- Advertisement -

அணியில் வீரர்களை சேர்ப்பதற்கான விதிமுறைகள் :

அந்த 11 வீரர்களை ஒரு அணியில் இருந்து ஏழு பேரையும், மற்ற அணியில் இருந்து நான்கு வீரர்கள் தேர்வு என எப்படி வேண்டுமோ அப்படி தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் பேட்ஸ்மேன்கள் குறைந்தது 3 வீரர்கள் முதல் அதிகபட்சமாக 6 (3-6) பேர் வரையிலும், ஆல்ரவுண்டர்களாக குறைந்தது 1 முதல் அதிகபட்சமாக 4 (1-4) தேர்வுசெய்து கொள்ளலாம். விக்கெட் கீப்பராக (1-4) நான்குபேர் வரையிலும், பவுலராக குறைந்தது 3 முதல் அதிகபட்சமாக 6 (3-6) ஆறு பேரை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

பேட்ஸ்மேன்கள் எடுக்கும் புள்ளிகளின் விவரம் :

- Advertisement -

பேட்டிங்கை பொறுத்தவரை எவ்வாறு உங்களுக்கு புள்ளிகள் கிடைக்கும் என்றால் நீங்கள் தேர்வுசெய்யும் பேட்ஸ்மேன் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு புள்ளிகள் வழங்கப்படும் (1 ரன் – 1 பாயிண்ட்) அதன்படி ஒரு பேட்ஸ்மேன் மொத்த ரன்களாக அவர் 50 ரன்களை குவித்தாரல் 50 புள்ளிகள் கிடைக்கும். அது மட்டுமின்றி நீங்கள் தேர்வு செய்த பேட்ஸ்மேன் பவுண்டரி அடிக்கும் போது ஒரு புள்ளியும் ( 1 பவுண்டரி – 1 புள்ளி) சிக்ஸ் அடிக்கும் பொழுது இரண்டு புள்ளியும் கிடைக்கும் (1 சிக்ஸ் – 2 புள்ளிகள்).

11

அதுமட்டுமின்றி நீங்கள் தேர்வு செய்த வீரர் அரை சதம் அடிக்கும் பட்சத்தில் 8 புள்ளிகள் போனஸ் கிடைக்கும் ( அரைசதம் – 8 புள்ளிகள்), செஞ்சுரி அடிக்கும் பட்சத்தில் 16 புள்ளிகள் (சதம் – 16 புள்ளிகள்) போனஸாக வழங்கப்படும். அதே சமயத்தில் நீங்கள் தேர்வு செய்த பேட்ஸ்மேன் அவுட் ஆனால் 2 புள்ளிகள் இழப்பீர்கள் (டக் அவுட் – 2 புள்ளிகள் மைனஸ்).

- Advertisement -

பவுலர்களுக்கு கிடைக்கும் புள்ளிகளின் விவரம் :

மேலும் பவுலிங்கை பொறுத்தவரையில் நீங்கள் தேர்வுசெய்யும் வீரர் தனது பவுலிங் மூலம் விக்கெட் எடுத்தால் 25 புள்ளிகள் ( 1 விக்கெட் – 25 புள்ளிகள்) கிடைக்கும். மேலும் ஒரே போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்தால் 8 புள்ளிகள் போனஸ் கிடைக்கும். 5 விக்கெட்டுகளை எடுத்தால் 16 புள்ளிகள் போனஸ் கிடைக்கும். அதுமட்டுமின்றி பவுலர் வீசும் ஒவ்வொரு மெய்டன் ஓவருக்கும் 8 புள்ளிகள் கிடைக்கும்.

- Advertisement -

12

பீல்டிங் மூலம் கிடைக்கும் புள்ளிகளின் விவரம் :

அதே போன்று நீங்கள் தேர்வுசெய்யும் பீல்டர்கள் கேட்ச் பிடிக்கும் பொழுது 8 புள்ளிகளும் ( 1 கேட்ச் – 8 புள்ளிகள்) ரன் அவுட் செய்யும் போது 12 புள்ளிகளும் ( 1 ரன்அவுட் – 12 புள்ளிகள்) கிடைக்கும். இந்த 12 புள்ளிகள் த்ரோ செய்யும் வீரர் ஒருவராகவும் அதனை பிடித்து அடிப்பவர் மற்றொருவர் எனில் புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்படும்.

கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் மூலம் கிடைக்கும் புள்ளிகள் :

நீங்கள் கேப்டனாக தேர்வு செய்யும் வீரர் பேட்ஸ்மேன் எனில் இரட்டிப்பு புள்ளிகள் கிடைக்கும். உதாரண விளக்கம் : ( 1 ரன் – 2 புள்ளிகள், 1 பவுண்டரி – 2 புள்ளிகள், 1 சிக்ஸ் – 4 புள்ளி, அரைசதம் – 16 புள்ளிகள், சதம் – 32 புள்ளிகள் கிடைக்கும்).

நீங்கள் கேப்டனாக தேர்வு செய்யும் வீரர் பவுலர் எனில் அதே இரட்டிப்பு புள்ளிகள் கிடைக்கும். உதாரண விளக்கம் : ( 1 விக்கெட் – 50 புள்ளிகள், 4 விக்கெட் – 16 புள்ளிகள், 5 விக்கெட்டுகள் – 32 புள்ளிகள்.)

Dream-11-1

அதேபோன்று துணைக்கேப்டனாக நீங்கள் தேர்வு செய்யும் வீரருக்கு இரட்டிப்பு புள்ளிகள் அல்லாது 1.5 சதவீத அளவில் புள்ளிகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி பவுலிங் மற்றும் பேட்டிங்கில் சொதப்பும் வீரர்களுக்கு மைனஸ் புள்ளிகளும் கிடைக்கும் விதிமுறை இந்த ஆப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் சரியான வீரர்களை தேர்வுசெய்து தரமான அணியை தயார்செய்து பணத்தை அள்ளுங்கள் நண்பர்களே..

Advertisement