சென்னையில் நடைபெற போகும் இன்றைய போட்டிக்கு எத்தனை தடைகள் தெரியுமா ?

Nsg-force

பல்வேறு தடைகளையும் மீறி கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர்கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிடும் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது.சென்னையில் இன்று ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா இல்லையா என்பதே நேற்றுவரை பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

chennai

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் பல தற்போது தீவிர போராட்டத்தில் குதித்துள்ளன. இந்தப்போராட்டத்தில் ஆளும்கட்சியை தவிர்த்து அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டுள்ளன.இந்நிலையில் தற்போது தமிழக அரசியல் கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், ஐபிஎல் போட்டிகளை தமிழகத்தில் நடத்த தடைக்கோரியும் ஆங்காங்கே நடத்திவரும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

- Advertisement -

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நேற்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அதில் பேசிய வேல்முருகன் “தமிழகத்தில் இந்தமுறை ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக்கூடாது. அதையும் தாண்டி ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் டிக்கெட் வாங்கி வைத்துள்ள எங்கள் ஆதரவாளர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்குள் புகுந்து போட்டியை நடத்தவிடாமல் போராடுவார்கள் என்று சவால் விட்டுள்ளார்.

இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்பவர்கள் பேனர்,கார் சாவி,லைட்டர்கள், பதாகைகள் மற்றும் பைனாகுலர் போன்ற பொருட்களை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

csk

- Advertisement -

இதுமட்டுமில்லாமல் செல்போன்,டேப்,கேமரா,லேப்டாப் ஆகியன கொண்டு செல்லவும் தடை.சிகரெட்,தீப்பெட்டி, பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றிடும் பொருட்களை மைதானத்தின் உள்ளே கொண்டுசெல்ல தடை.தண்ணீர் பாட்டில் மட்டும் உணவுப்பொருட்களை எடுத்துவர தடை.இவை அத்தனை தடைகளையும் மீறி மைதானத்திற்குள் பொருட்களை வீசுபவர்கள் உடனடியாக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்டுவார்கள்.

தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் செயல்படுபவர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.மைதானத்தை விட்டு ஒருமுறை வெளியேறிவிட்டால் மீண்டும் உள்ளே செல்லத்தடை.இத்தனை தடைகளையும் தாண்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க சுமார் 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவுமுதலே சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement