போகட்டும் விடுங்க, மும்பைக்கு மட்டும் விளையாடட்டும் – பும்ரா காயம் பற்றி ஆதாரத்துடன் ரசிகர்கள் பேச்சு

Jasprith Bumrah
- Advertisement -

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 30 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் இறுதிக்கட்டமாக தயாராகி வரும் இந்தியா உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் பங்கேற்காத நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 2வது போட்டியில் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் முதுகுப் பகுதியில் எலும்பு முறிவு காயத்தை சந்தித்ததால் தென் ஆப்பிரிக்க தொடர் மட்டுமல்லாது உலக கோப்பையிலிருந்தும் அவர் விலகுவதாக நேற்று செய்திகள் வெளியானது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் கடந்த 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் தன்னுடைய வித்யாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

அதிலும் டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே, மிடில் ஓவர்களில் குறைவான ரன்களைக் கொடுத்து கச்சிதமாக பந்து வீசக்கூடிய அவர் டெத் ஓவர்களில் யார்கர் பந்துகளை வீசி விக்கெட்களை எடுத்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் துருப்பு சீட்டாக பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட தங்கமான பவுலராக போற்றப்படும் அவர் கடைசி நேரத்தில் விலகியுள்ளது இந்தியாவின் உலக கோப்பை கனவையும் உடைத்து விட்டதாக பெரும்பாலான ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

போனால் போகட்டும்:
ஏனெனில் வேகம், பவுன்ஸ் ஆகி அம்சங்களுக்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துள்ள புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகியோர் வெறும் 130+ கி.மீ வேகத்தில் பந்து வீசுவதுடன் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். முன்னதாக முதன்மை பவுலரான பும்ரா இதுபோன்ற காயங்களை சந்தித்த விடக்கூடாது என்பதற்காகவே இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே என இந்த வருடம் இந்தியா பங்கேற்ற பெரும்பாலான முக்கியமில்லாத தொடர்களில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

- Advertisement -

அதையும் தாண்டி அவர் காயமடைந்து வெளியேறியுள்ளதை பார்க்கும் குறிப்பிட்ட சில ரசிகர்கள் போனால் போகட்டும் விடுங்க, இவர் ஐபிஎல் விளையாடுவதற்கு மட்டுமே சரியானவர் என்று அதிருப்தியுடன் பேசுகிறார்கள்.
1. ஏனெனில் 2019 முதல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 60 போட்டிகளில் வெறும் 1 போட்டியில் மட்டுமே ஓய்வெடுத்த அவர் 59 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2. ஆனால் பணிச்சுமையை நிர்வகிக்கிறேன் என்ற பெயரில் அதே 2019 முதல் இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் நடைபெற்ற 70 போட்டிகளில் அவர் வெறும் 16 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

- Advertisement -

3. இப்போது கூட காயத்தால் 6 மாதம் கழித்துதான் விளையாடுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அப்படியானால் அந்த 6 மாதங்கள் முடியும்போது ஐபிஎல் 2023 தொடரில் முழுமையாக குணமடைந்து அவர் மும்பைக்காக விளையாடுவார் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் அதன்பின் இந்தியாவுக்காக விளையாடும் போது பணிச்சுமை என்ற பெயரில் முக்கிய போட்டிகளை தவிர்த்து பெரும்பாலும் ஓய்வில் இருப்பார் என்று வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

4. அதுபோக 2016இல் அறிமுகமான அவர் இதுவரை 2016, 2017, 2019, 2021, 2021 (டெஸ்ட் சாம்பியன்ஷிப்) ஆகிய வருடங்களில் 5 ஐசிசி உலகக்கோப்பையில் விளையாடியும் முக்கிய போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்ததில்லை. அதனால் இப்போது மட்டும் ஏன் கவலைப்பட வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

5. அதைவிட 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பக்கார் ஜமான் அவுட்டான பந்தை நோ பாலாக வீசி அவரை சதமடிக்க விட்டு கோப்பையை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்ததை போல் முக்கிய போட்டியில் சொதப்ப கூடிய பவுலராகவே பும்ரா இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

6. மேலும் 2007 டி20 உலகக்கோப்பையில் இர்பான் பதான், ஸ்ரீசாந்த், ஆர்பி சிங் போன்ற அனுபவமில்லாத இளம் பவுலர்களை வைத்து தான் இந்தியா கோப்பையை வென்றதாக தெரிவிக்கும் ரசிகர்கள் இப்போதும் அதுபோல் வெல்வோம் அல்லது வீழ்ந்து லீக் சுற்றுடன் வெளியேறுவோம் என்று தைரியத்துடன் பேசுகின்றனர்.

இதையும் படிங்க : அதை செய்யலனா பும்ரா கண்டிப்பாக காயமடைவார் – அன்றே கணித்த பாக் ஜாம்பவானின் வைரல் வீடியோ

7.  ஒருவேளை தோற்றால் இதர வீரர்கள் தோல்வி பாடத்தை கற்றுக்கொண்டு அடுத்த உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு வெற்றி பெற்றுக் கொடுக்கும் தன்னம்பிக்கையை பெறுவார்கள் அல்லது வென்றால் வருங்கால சூப்பர் ஸ்டார்கள் கிடைப்பார்கள் என்று கூறும் குறிப்பிட்ட சில ரசிகர்கள் பூனை கண் மூடினால் உலகம் இருண்டு விடாது என்று தெம்பாக பேசுகிறார்கள்.

Advertisement