ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் Owners கோடி கணக்கில் சம்பாதிப்பது எப்படி தெரியுமா ?… வெளிவந்த தகவல் !

zintha
- Advertisement -

ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும் பலகோடி ரூபாய் செலவிட்டு வீரர்களை ஏலம் எடுக்கும் போதெல்லாம் இவ்வளவு பணத்தை செலவு செய்து ஒரு அணியை உருவாக்குவதாலோ அல்லது கட்டமைப்பதாலோ அணியின் உரிமையாளர்களுக்கு என்ன இலாபம் இருக்க போகின்றது என்கிற கேள்வி உங்களது மனதில் எழுந்திருக்கலாம்.

owner

- Advertisement -

ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தாங்கள் செலவு செய்திடும் ஒவ்வொரு கோடிக்கும் பதில் இலாபமாக பலகோடி ரூபாய்க்களை இலாபமாக எடுத்து வருவது குறித்து உங்களுக்கு தெரியுமா !வாருங்கள் ஒவ்வொரு ஐபிஎல் அணி உரிமையாளர்களும் எப்படி கோடிகளை அள்ளுகின்றார்கள் என தற்போது பார்ப்போம்.

இந்த ஆண்டின் 11வது ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் இருதினங்களே உள்ளன. வரும் சனிக்கிழமை முதல் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்படவுள்ளது. 8 அணிகள் கலந்துகொள்ளும் இந்த ஐபிஎல் போட்டிகளானதுஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடக்க மற்றும் இறுதிப் போட்டியை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 9 நகரங்களில் 51 நாட்களாக நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கப்படவுள்ள முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

- Advertisement -

இந்தாண்டு ஐபிஎல் வீரர்களை ஏலம் எடுக்கும் படலம் கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்றது. அதில் 8அணிகளை சேர்ந்த உரிமையாளர்கள் ஒவ்வொரு வீரர்களையும் போட்டி போட்டுக்கொண்டு பலகோடிகளை குவித்து தங்களது அணிக்காக வாங்கியதை நீங்கள் பார்த்திருக்கலாம்.பலகோடிகளை செலவு செய்து வீரர்களையும் அணியையும் உருவாக்கிடும் அணி உரிமையாளர்கள் ஐபிஎல்-இல் எப்படியெல்லாம் சம்பாதிக்கின்றார்கள் தெரியுமா !

jersy

1. அணியின் ஜெர்சியில் விளம்பரம்.

- Advertisement -

ஒவ்வொரு அணியின் வீரர்கள் அணிந்துள்ள ஜெர்சியை பார்த்தால் தெரியும் உங்களுக்கு. பல்வேறு துறையின் முன்னனி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பிராண்ட் பெயரை ஜெர்சியில் பதிக்க பல நூறு கோடிகளை அணியின் உரிமையாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் கொட்டுகின்றது.

2. டிக்கெட்டுகள் விற்பனை.

- Advertisement -

ஒவ்வொரு போட்டியையும் மைதானத்தில் காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் விரும்புகின்றனர். அப்படி மைதானத்தில் போட்டியை காண ஒவ்வொரு ரசிகரும் வாங்கிடும் டிக்கெட் விலையில் ஒரு பகுதி அணியின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.

3. போட்டிகளை ஒளிபரப்பிடும் உரிமம்.

ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் போட்டிகளையும் தங்களது சேனலில் ஒளிபரப்பிட முன்னனி ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கான கோடிகளை பிசிசிஐக்கு செலுத்தி கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை பெறுகின்றது.இதன் மூலம் வரும் வருவாயில் பிசிசிஐ தனக்கான பங்கை எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகையை மற்ற அணியின் உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும்.இந்த தொகையின் மூலம் மட்டுமே அணியின் உரிமையாளர்கள் செலவிட்ட பணத்தின் பெரும்பகுதி திரும்ப கிடைத்துவிடுமாம்.

4. பரிசுத்தொகை.

ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிக்கும் மற்றும் இரண்டாமிடம் பெறும் அணிக்கும் வழங்கப்படும் புரிசுத்தொகை மூலம் அணி உரிமையாளர்கக்கு வருமானம் கிடைக்கின்றது.

5. பிராண்ட் வேல்யூ.

ஷாருக்கான் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா போன்ற அணி உரிமையாளர்கள் ஏற்கனவே மக்களிடையே பிரபலமானவர்கள். எனவே இவர்கள் பிரபலமானவர்கள் என்கிற அடிப்படையில் இவர்களுக்கு விளம்பர நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் ஸ்பான்சர் தொகை மட்டுமே ஒரு பெரும் பகுதி கிடைக்கும்.

6. பங்குகளின் விற்பனை மூலம்.

ஒவ்வொரு அணியும் தங்களது பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மிகப்பெரிய தொகை அந்த அணியின் உரிமையாளர்களுக்கு கிடைக்கின்றது.

Advertisement