இன்னுமா உலகம் நம்புது.. இலங்கையில் கையில் இந்தியாவின் கனவு.. 2025 ஃபைனல் செல்ல நிகழ வேண்டியது

WTC Final
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் 10 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா நழுவ விட்டுள்ளது. அதை விட 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது.

ஏனெனில் தென்னாப்பிரிக்கா ஏற்கனவே முதல் அணியாக தகுதி பெற்று விட்டது. இந்திய அணியை தோற்கடித்த ஆஸ்திரேலியா 61.45% புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா 52.77% புள்ளிகளுடன் சரிவை சந்தித்து மூன்றாவது இடத்தில் தொடர்கிறது. அதன் காரணமாக வெறும் 10% மட்டுமே ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருக்கிறது என்று சொல்லலாம்.

- Advertisement -

நிகழ வேண்டியது:

அதற்கு முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அது மட்டுமின்றி அடுத்ததாக இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா ஒரு வெற்றியைக் கூட பெறக்கூடாது.

அதாவது அந்தத் தொடரில் 2 – 0 அல்லது 1 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை இலங்கை தோற்கடிக்க வேண்டும். அவ்வாறு நடைபெற்றால் இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறும். அதே போல அத்தொடர் 0 – 0 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தாலும் இந்தியா ஃபைனலுக்கு செல்லும். அந்த வகையில் இந்தியாவின் ஃபைனல் வாய்ப்பு இம்முறை இலங்கையின் கைகளில் உள்ளது என்று சொல்லலாம்.

- Advertisement -

இன்னுமா நம்புறீங்க:

ஒருவேளை 5வது போட்டியில் இந்தியா ட்ராவை சந்தித்தால் கூட வெளியேறி விடும். அது போன்ற சூழ்நிலையில் 2 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்கும் பட்சத்தில் இலங்கை ஃபைனலுக்கு சென்று விடும். ஆனால் இங்கே கடைசி போட்டியில் இந்தியா வெல்லுமா என்பது கேள்வியாகும். ஏனெனில் தற்போதைய அணியில் பும்ரா, ஜெய்ஸ்வால், நிதிஷ் ஆகியோரை தவிர்த்து பெரும்பாலான வீரர்கள் மோசமான ஃபார்மில் உள்ளார்கள்.

இதையும் படிங்க: அஸ்வின், ஆண்டர்சன் உட்பட 2024இல் ஓய்வு பெற்ற ரசிகர்கள் மனம் கவர்ந்த கிரிக்கெட்டர்கள்.. லிஸ்ட் இதோ

அதனால் கடைசி போட்டியை இந்தியா டிரா செய்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படியே வென்றாலும் 2 – 0, 1 – 0 என்ற கணக்கில் வலுவான ஆஸ்திரேலிய அணியை இலங்கை தோற்கடிக்குமா என்பது கேள்வியாகும். அதன் காரணமாக இன்னுமா இந்தியா 2025 ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று இந்த உலகம் நம்புது? என ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement