அஸ்வின், ஆண்டர்சன் உட்பட 2024இல் ஓய்வு பெற்ற ரசிகர்கள் மனம் கவர்ந்த கிரிக்கெட்டர்கள்.. லிஸ்ட் இதோ

Ashwin Players
- Advertisement -

2024 வருடம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் 2025 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக உள்ளனர். இந்த நிலையில் 2024 வருடத்தில் ஓய்வு பெற்ற சில நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.
1. ரவிச்சந்திரன் அஸ்வின்: இந்தியாவுக்காக இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த தமிழ்நாட்டின் ஜாம்பவான் அஸ்வின் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளர் ஆவார்.

முத்தையா முரளிதரனுக்கு நிகராக அதிக டெஸ்ட் தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் 38 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெற்றுள்ளார்.
2. ஜேம்ஸ் ஆண்டர்சன்: வயதை வெறும் நம்பராக்கி அசத்தி வந்த ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் சமீப காலங்களில் அவரால் பழைய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

- Advertisement -

முடிந்த சகாப்தங்கள்:

அதனால் அணியின் நலனுக்காக 704 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் ஜூலை மாதம் ஆண்டர்சன் ஓய்வு பெற்றார்.
3. ஷிகர் தவான்: 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றிய தவான் ரசிகர்களால் மிஸ்டர் ஐசிசி என்று அழைக்கப்பட்டார். அந்தளவுக்கு ஐசிசி தொடர்களில் அபாரமாக செயல்பட்ட அவர் சமீப காலங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

மேலும் கில், ஜெய்ஸ்வால் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் வந்ததால் 38 வயதில் தவான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
3. தினேஷ் கார்த்திக்: தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரரான இவர் 2018 நிதஹாஸ் கோப்பையை இந்தியா வெல்ல உதவியதை மறக்க முடியாது. அதை தவிர்த்து தொடர்ந்து அசத்தாத தினேஷ் கார்த்திக் தனது 39வது பிறந்தநாளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

- Advertisement -

விடை பெற்ற நட்சத்திரங்கள்:

4. டேவிட் வார்னர்: 3 வகையான கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியாவுக்காக சிறந்த துவக்க வீரராக விளையாடிய இவர் சமீபத்திய வருடங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தடுமாறினார். அதனால் கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருடன் வார்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதையும் படிங்க: தாமும் அசத்தாம ராகுலையும் விடாம.. இந்தியாவை முடிச்ச ரோஹித்தை தூக்கிட்டு அவரை கேப்டனா போடுங்க.. பசித் அலி

5. டிம் சௌதீ: நியூசிலாந்துக்காக இரண்டாவது அதிகபட்ச டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இவர் வயது காரணமாக 17 வருடங்கள் விளையாடி கடந்த சில வாரத்துக்கு முன் பிரியா மனதுடன் ஓய்வு பெற்றார்.
6. மொய்ன் அலி: 2022 டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய இவர் கடந்த ஜூன் மாதம் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
7. ரோஹித், கோலி, ஜடேஜா: 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்த 3 நவீன கிரிக்கெட்டின் இந்திய நட்சத்திர வீரர்களும் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

Advertisement