மும்பைக்கு எதிரான வெற்றியின் ரகசியத்தை உடைத்த விராட் கோலி !

kohli
- Advertisement -

தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி எப்போதும் ஆடுகளத்தில் ஒரு ஆக்ரோஷமான விளையாட்டு வீரராக தான் இருந்து வருவார். இளம் வீரரான வீராட் கோலி கிரிக்கெட் போட்டிகளின் போது அடிக்கடி வீரர்களுடன் எதையாவது பேசிக் கொண்டே இருப்பர். ஆனால் தற்போது அது தவறு என்று புரிந்து கொண்டுள்ளார் வீராட். கேப்டன் கூல் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருபவர் கோலி.

Virat Kohli

- Advertisement -

ஆனால் தோனியின் கூல் தன்மைக்கு மாறாக கோலிக்கு எல்லாமே வெறி தான். தற்போது ஐபில் தொடரில் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்து வரும் கோலி தலைமையில் அந்த அணி படுமோசமாக விளையாடி வருகிறது. ஆனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு நேற்று நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியல் ஒரு படி முன்னேறியது. நேற்று நடந்த போட்டியில் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 167 ரன்களை எடுத்தது. மேலும் இந்த அணியின் கேப்டனான கோலி 32 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

பின்னர் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் களமிறங்கிய பாண்டியா அபாரமாக விளையாடி அரை சதத்தை அடித்தார். இருப்பினும் அந்த அணி வெற்றியின் அருகில் வந்து தோற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்றதற்கு காரணம் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் தான். பின்னர் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கோலி ” நான் அணைத்து போட்டிகளிலும் பந்துவீச்சாளர்களிடம் சென்று எதையாவது பேசிக் கிட்டே  இருப்பேன் .

kohli

ஆனால் இந்த போட்டியில் அனைத்தையும் அவர்களிடமே விட்டுவிட்டான். மேலும் உங்கள் விருப்பப்படியே ஃபீல்டர்களை நிறுத்திக்கொள்ளுங்கள், உங்கள் விருப்பபடி திட்டமிடுங்கள் என்று அவர்களுக்கு முழு சுதந்திரம் அளித்தேன். பந்துவீச்சாளர்களிடம் அதிக ஆலோசனை கூறுவதும், அதிகம் பேசுவதும் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை நான் இந்த போட்டியில் புரிந்துகொண்டேன். “என்று கூறியுள்ளார்.

Advertisement